(Reading time: 8 - 15 minutes)

  

"காற்று நுழையாத இடத்திலும் கடவுள் நுழைவார். அவர் நுழையாத இடத்திலும் நாங்கள் நுழைந்து விடுவோம். என்று செய்தியாளர்கள் கூறினார்கள்

  

யானையார் வந்திருந்த பத்திரிகையாளர்களை ஒவ்வொருவராகத் தன் துதிக்கையால் தூக்கி ஒரு மரக்கிளையில் உட்கார வைத்தார்.

  

போட்டிகள் தொடங்கின. முதலில் பொட்டல் வெளி நடுவில் ஐந்து கழுதைகள் வந்து நின்று கடவுள் வாழ்த்துப் பாடின. ஐந்தும் ஒரே குரலில் ஒருமித்துப் பாடியபோது அவற்றின் குரல் கைலாசத்துக்கு எட்டி யிருக்க வேண்டும் என்று மிருகங்கள் பேசிக் கொண்டன.

  

அடுத்து நடனப் போட்டி நடை பெற்றது.

  

ஆறு மயில்கள்.

  

மூன்று மூன்று எதிர்க்கட்சியாக இருந்து தோகை விரித்து தாளத்திற்கேற்பக் கால்போட்டு ஆடியது கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது.

  

அடுத்தது குரங்குகள். கைகூப்பி வணக்கம் சொன்னபின் அவை குட்டிக் காரணம் போட்டே மேடையை வலம் வந்தன. அவை செய்த வேடிக்கை யைப் பார்த்துக் கூடியிருந்த விலங்குகள் அனைத்தும் கூக்குரலிட்டு ஆரவாரம் செய்தன.

  

அடுத்தது மல்யுத்தம்.

  

இரண்டு காட்டானைகள் ஒன்றை யொன்று மோதிச் சண்டையிட்ட காட்சி உடம்பு நடுங்க வைத்தது. துதிக்கையால் வளைத்தும் காலால் மிதித்தும். கட்டிப் புரண்டும் படுபயங்கரமாகச் சண்டை யிட்டன.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.