(Reading time: 9 - 17 minutes)

குழந்தைகள் சிறப்பு சிறுகதை - இரங்கூன் முயலும் யானை வேட்டையும் - நாரா நாச்சியப்பன்

மது தமிழ் நாட்டுக்குக் கிழக்கே ஒரு பெரிய கடல் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். கண்ணகி சிலை இருக்கும் கடற்கரைக்குக் காற்று வாங்கச் செல்கிறோம். அங்கே அலைமோதிக் கொண்டிருக்கும் கடலில் இறங்கிக் காலை நனைத்துக்கொண்டால் ஒரு மகிழ்ச்சி உண்டாகிறது. சில சிறுவர்கள் கடலுக்குள் இறங்கி அலைகளை எதிர்த்து நீந்திக் குளிப்பதைப் பார்க்கும் போது அவர்கள் அடையும் இன்பத்தை நாம் அள விட்டுக் கூறமுடியாது.

  

இந்தக் கடலை நாம் வங்கக் கடல் என்று அழைக்கிறோம். இந்த வங்கக் கடலில் கப்பலில் ஏறிக் கிழக்கே சென்றால் ஆயிரம் கல்தொலைவில் இரங்கூன் என்ற நகர் உள்ளது. இரங்கூன் பர்மிய நாட்டின் தலைநகர மாகும்.

  

இரங்கூன் நகரிலிருந்து கிழக்கே சென்றால் ஒரு பெரிய காடு இருக்கிறது. அந்தக் காட்டில் ஒரு குட்டி முயலுக்கு ஒரு முறை பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் அன்று அதன் அம்மா ஒரு பெரிய விருந்து வைத்தது. அந்த விருந்துக்கு வந்த பல முயல்கள் வகை வகையான இலைகளையும் குழைகளையும் பரி சாகக் கொண்டு வந்து கொடுத்தன. குட்டி முயலின் அம்மாவுக்கு ஏராளமான உறவினர்கள் இருந்ததால் பல பகுதிகளிலிருந்து முயல்கள் வந்து வாழ்த்துக் கூறின.

  

ஷான் நாட்டிலிருந்து வந்த சின்ன முயல் ஒன்று குட்டி முயலுடன் அன்பாகப் பழகியது. இரண்டும் நண்பர்களாகி விட்டன. விருந்தெல்லாம் முடிந்த பிறகு ஷான் நாட்டு முயல், குட்டி முயலைப் பார்த்து உங்கள் காடெல்லாம் சுற்றிப் பார்க்கலாம் வருகிறாயா என்று கேட்டது. குட்டி முயலும் அம்மாவிடம் ஒப்புதல் பெற்றுக் கொண்டு அந்த வெளியூர் முயலுடன் புறப் பட்டது.

  

காட்டுப் பகுதிகளையெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு இரண்டு முயல்களும் துள்ளிப் பாய்ந்து ஓடின. கால்வாய்களைக் கடக்க ஒரு தாவல் . கரும்புத் தோட்டங்களின் இடையே ஒரு துள்ளல். நெல் வயல் களின் ஊடே ஒரு ஓட்டம். காட்டு மரங்களின் நடுவில் ஒரு ஆட்டம். புதர்களைத் தாண்டி ஒரு பாய்ச்சல் . இப்படியாக அவை போட்ட ஆட்ட பாட்டங்களுக்கு

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.