(Reading time: 9 - 17 minutes)

அளவில்லை.

  

இரண்டு முயல்களும் போட்டி போட்டுக் கொண்டு பாய்ந்த போது, ஒரு மரத்தடியில் படுத்திருந்த ஒரு காட்டானை மீது விழுந்தன. சினத்தோடு விழித் தெழுந்த காட்டானை தன் துதிக்கையை நீட்டி அவற்றை வளைத்துப் பிடித்து வீசி எறிந்தது. விட் டெறிந்த பந்துகளைப் போல் அந்த முயல் குட்டிகள் இரண்டும் ஒரு தேக்க மரத்தின் அடியில் மோதி விழுந் தன . உடம்பெல்லாம் ஒரே வலி

  

இன்னொருமுறை என் தூக்கத்தைக் கெடுத்தால் உங்களை வானுலகத்திற்கே அனுப்பி விடுவேன் என்று அந்தக் காட்டானை பிளிறியது. தப்பித்தோம், பிழைத்தோம் என்று அந்தக் குட்டி முயல்கள் அங் கிருந்து ஓட்டம் பிடித்தன.

  

ஒரு கால்வாய்க் கரையில் இருந்த மாமரத்தின் அடியில் இரண்டு முயல் குட்டிகளும் இளைப்பாறுவதற்காகத் தங்கின. அப்போது ஷான் நாட்டுச் சின்ன முயல், "இந்த யானை தூக்கி எறிந்ததில் என் முதுகெல்லாம் வலிக்கிறது'' என்றது.

  

"எனக்கு வயிற்றில் நல்ல அடி. இன்னும் வலிக்கிறது'' என்றது குட்டி முயல்.

  

"இந்த யானைக்கு ஒரு பாடம் காட்ட வேண்டும். நீ என்ன சொல்லுகிறாய்? என்று கேட்டது ஷான் நாட்டுச் சின்னமுயல்.

  

"அது எவ்வளவு பெரிய விலங்கு. அதை நாம் என்ன செய்யமுடியும்?' என்று கூறியது குட்டிமுயல்.

  

இவ்வாறு பேசிக்கொண்டே அங்கிருந்து புறப் பட்டன. வழியில் வெட்டிக் கிடந்த ஒரு பள்ளத்தைக் கண்டன. இரண்டும் ஒரே தாவலில் அந்தப் பள்ளத் தைக் கடந்தன.

  

''கொஞ்சம் நில். இப்படிச் செய்யலாமா?'' என்று ஷான் முயல் கேட்டது.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.