(Reading time: 9 - 17 minutes)

இருந்தது. ஷான் முயல் பேச்சைக் கேட்டுத் தான் தவறான செயலைச் செய்வதாக மனத்தில் உறுத்தியது. இப்போது மனிதர்கள் அதைக் கட்டித் தூக்கிக் கொண்டு போகப் போவதை எண்ணிய போது அதற்கு மனமே உடைந்து போய் விடும் போல் இருந்தது.

  

ஷான் முயல் யானையைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இரங்கூன் முயல் அதற்குத் தெரியாமல் அங்கிருந்து நழுவியது. சிறிது தொலைவில் சுண்டெலிகள் இருக்கும் பகுதிக்குச் சென்றது.

  

சுண்டெலிகளின் தலைவன் குட்டி முயலைக் கண்டவுடன் வெளியே வந்தது.

  

''குட்டி முயலே, உன் பிறந்தநாள் விருந்துக்கு வர முடியவில்லை. உன் அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டதாகச் சொல். என் மனைவிக்கு உடல் நலம் இல்லை என்று சுண்டெலித்தலைவன் கூறியது.

  

"எலியண்ணா, நான் இப்போது உங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்'' என்று குட்டி முயல் கூறியது.

  

நடந்த கதையைக் கூறி யானையைக் காப்பாற்ற உதவ வேண்டும் என்று குட்டி முயல் சுண்டெலியை மன்றாடிக் கேட்டது .

  

"உன்னைப் போல் எல்லாருக்கும் நன்மையே எண்ணுகின்ற மனம் எல்லாருக்கும் இருந்து விட்டால், இந்த உலகம் பொன்னுலகம் ஆகிவிடும்'' என்று கூறிய சுண்டெலி, அங்கு இருந்த நூறு எலிகளையும் அழைத்துக் கொண்டு முயலுடன் புறப்பட்டது.

  

நூறு எலிகளும் யானையைக் கட்டியிருந்த பேருந்தின் மேல் சரசரவென்று ஏறின . கயிறுகளை அங்கங்கே கடித்துக் குதறின. எல்லாக் கட்டுகளும் அவிழ்ந்தவுடன் பாய்ந்தோடித் தங்கள் இருப்பிடத் திற்குத் சென்று விட்டன.

  

கட்டுத் தளர்ந்தவுடன், யானை பேருந்தின் பக்க அடைப்புகளை ஒடித்துக்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.