(Reading time: 4 - 7 minutes)
தெனாலி ராமன் கதைகள்
தெனாலி ராமன் கதைகள்

குழந்தைகள் ஸ்பெஷல்ஸ் - தெனாலி ராமன் கதைகள் - 3. பேராசைப் பட்டால்...

கிருஷ்ணதேவராயரையும் அவரின் மனைவியையும் மகிழ்விக்க புகழ்பெற்ற நாடக குழுவினர் அரண்மனைக்கு வந்திருந்தனர்.

  

நாடக குழுவினரின் கவனத்தை சிதற செய்யாமல் இருக்க அரசர் நாடகம் பார்க்க விரும்புபவர்கள் அனைவரையும் நேரத்திற்கு வர சொல்லி இருந்தார்.

  

தாமதமாக வந்து யாரும் தொந்தரவு செய்யாமல் இருக்க அரண்மனையின் பிரதான வாயிலிலும், நாடகம் நடக்கும் மண்டபத்தின் வாசலிலும் காவலர்களை நியமித்து நாடகம் தொடங்கியப் பின் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று அரசர் கட்டளை இட்டார்.

  

தெனாலி ராமன் மற்ற அலுவல்கள் முடித்து நாடகம் பார்க்க வர தாமதமாகி விட்டது.

  

எப்பொழுதும் போல அரசரின் அரண்மனைக்குள் ராமன் நடக்க, அங்கே இருந்த காவலன் அவனைத் தடுத்தான்.

  

“தாமதமாக வரும் யாரும் யாரும் அரண்மனைக்குள் நுழையக் கூடாது. இது அரசரின் உத்தரவு”

  

ராமனுக்கு நாடகம் பார்க்க ஆர்வமாக இருந்தது.

  

“நான் அரசரைப் பார்க்க வேண்டும். அவர் எனக்கு வெகுமதி தருவதாக சொல்லி இருந்தார்.”

  

காவலனுக்கு ஆசை ஏற்பட்டது!

  

வெகுமதி எப்போதும் போல தங்க காசுகளாக தான் இருக்கும்!

  

காவலன் ராமனைப் பேராசையுடன் பார்த்தான்.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.