(Reading time: 11 - 21 minutes)

கடுமையாகச் சொல்லி அனுப்பினாள்.

  

அம்மாச்சிட்டுக்கு, ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ஆனந்தமாகச் சிறகடித்துப் பறந்து கொண்டே அரசமரத்தை நோக்கிச் சென்றது.

  

அங்கே, சின்னச்சிட்டுகள் இரண்டும், வழக்கம் போலப் பறந்து விளையாடிக் கொண்டிருந்தன.

  

அம்மாவைக் கண்டதும், ஆசையோடு வந்து அருகில் உட்கார்ந்து கொண்டன.

  

அம்மா, தின்ன என்னம்மா கொண்டு வந்தாய்?” என்று ஆவலாகக் கேட்டன.

  

இப்பொழுது, தீனி ஒன்றும் சொண்டு வரவில்லை. ஆனால் உங்களுக்குச் சீனி போல் இனிப்பான செய்தி ஒன்று கொண்டு வந்திருக்கிறேன்” என்று அம்மாச் சிட்டு கூறியது.!

  

என்ன என்ன?’ என்று இரண்டு சிட்டுகளும் குதித்துக் கொண்டு கேட்டன.

  

உங்களை நாளைக்குப் பள்ளிக் கூடத் தில் சேர்த்து விடப் போகிறேன். தலைமை ஆசிரியை உங்களைச் சேர்த்துக் கொள்ள ஒப்புக் கொண்டு விட்டார்கள்” என்று அம்மா கூறியது.

  

இந்தச் செய்தியைக் கேட்டதும், இரண்டு சிட்டுக்களும் குதித்துக் குதித்துப் பறந்தன.

  

"நாங்கள் படிக்கப் போகிறோம்” என்று கத்திக் கொண்டே அரசமரத்தைச் சுற்றிச் சுற்றி வந்தன. அந்த மரத்தில் குடியிருந்த பறவைகளுக் கெல்லாம் இது புதிய செய்தியாய் இருந்தது.

  

படித்தால் பெரிய நிலைக்கு வரலாம். இன்பமாக வாழலாம். அறிஞர்கள் பாராட்டுவார்கள். இப்படிப்பட்ட வாய்ப்பு அந்தச் சிட்டுக் குஞ்சுகளுக்குக் கிடைத்ததைக் கண்டு அரசமரத்துப் பறவைகளெல்லாம் வாழ்த்துக் கூறின.

  

அம்மாச்சிட்டு, கவுடியா மடத்தின் எதிரில் இருந்த ஒரு தையற் கடைக்குப் பறந்து சென்றது.

  

தையல் பொறியின் மேல் போய் உட்கார்ந்து கொண்டு அந்தத் தையற்கலைஞரைப் பார்த்து,

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.