(Reading time: 11 - 21 minutes)
Visiri Vazhai
Visiri Vazhai

இப்பத்தான் வந்திருக்கிறார்...''

''அவனைக் கூப்பிடு இங்கே...”

கூப்பிட்டீங்களா அத்தை!'' என்று இறைந்து சத்த மிட்டபடியே மாடிப்படிகள் அதிர ஏறி வந்தான் ராஜா.

தான் எதுவுமே தவறு செய்யாதவன் போல் காட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்-காகவே அவசியமின்றி உரத்துச் சத்தமிட்டுக் கொண்டு வந்தான் அவன்.

"ஏண்டா இவ்வளவு நேரம் உனக்கு?''

இன்றைக்கு எங்க காலேஜிலே ஆண்டு விழா அதனாலே லேட்” என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

ஓகோ! ஆண்டு விழாவா? ரொம்ப ஜோராக நடந் திருக்குமே! உ பார்ட்டி உண்டா? பிரின்ஸிபால் என்ன பேசினார்?”

"ஆமாம்; ரொம்ப கிராண்ட்! பிரின்ஸிபால் ரொம்ப நல்லாப் பேசினாரு...'' என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

அப்புறம் டீ பார்ட்டியிலே என்னடா ஐட்டம்?”

"...ம்.... மசாலா தோசை!....”

"என்னடா உளறுகிறாய்?... டீ பார்ட்டியிலே மசாலா தோசையா?”

"ஆமாம், அத்தை! மாணவர்கள் எல்லோரும் சேர்ந்து கேட்டுக் கொண்டோம், மசாலா தோசை வேண்டும் என்று...'' என்று பொய் சொன்னான் ராஜா. இல்லை; புளுகினான்.

''சரி; லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வரச் சொன்னே, வாங்கி வந்தாயா?”

''ஓ!' என்று கூறிய ராஜா, லைப்ரரிப் புத்தகங்களை எடுத்து அத்தையிடம் கொடுக்க வந்தான். அப்போது அந்தப் புத்தகம் ஒன்றிலிருந்து இரண்டு சினிமா டிக்கெட்டு கள் கீழே உதிர்ந்தன.

''இதென்னடா சினிமா டிக்கெட்?”

''யாரோ இதுக்கு முன்னாலே இந்தப் புத்தகத்தை லைப்ரரியிலிருந்து வாங்கிக் கொண்டு போனவங்க சினிமாவுக்குப் போயிருப்பாங்க. அவங்க இந்தப் புத்தகத்திலே அந்த டிக்கெட்டுகளை வைத்திருப்பாங்க" என்றான் ராஜா.

பார்வதிக்கு எல்லாம் புரிந்து விட்டது. அவள் புன்முறுவலோடு அவனை ஏற இறங்கப் பார்த்தாள். அந்தப் பார்வையிலும் சிரிப்பிலும் ''ஏன் பொய் சொல்கிறாய்?" என்ற கேள்வி பொதிந்து கிடந்தது.

"ராஜா! உங்க கல்லூரிப் பிரின்ஸிபாலுக்குத் துளிக்கூட கடமையுணர்ச்சி என்பதை கிடையாது?”

''ஏன் அத்தை அப்படிச் சொல்றீங்க. அவர் எதிலேயும் ரொம்ப கரெக்ட் ஆச்சே!''

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.