(Reading time: 6 - 12 minutes)
Muthu Sippi
Muthu Sippi

எவ்வளவோ பேச முயன்றும் பாலு விறைப்பாகவே நடந்து கொண்டான். இருவரும் கூடத்தில் இருந்த மேஜையருகில் உட்கார்ந்து வீட்டுப் பாடங்களை எழுத ஆரம்பித்தார்கள். ஜெயஸ்ரீயின் விஞ்ஞான நோட்டுப் புத்தகம் ஏ ஏடாகக் கிழிந்து கிடந்தது. அவசர அவசரமாக எல்லாப் புத்தகங்களையும் பார்வையிட்டாள். பாலு எழுதிவைத்திருந்த குறிப்பும் அவள் கண்ணில் பட்டது. சுமதிக்கு ஒரே சமயத்தில் கோபமும் பக்கமும் போட்டி போட்டுக் கொண்டு கிளம்பின. அழுதவாறு, கிழிந்த நோட்டுப் புத்தகத்துடன் அவள் மாடிக்குச் சென்றாள்.

  

இந்தச் சமயம் பார்த்து அத்தையிடம் போகாமல் அம்மாவிடம் போகிறது. மாமி கோமதி என்ன சொல்லுவாளோ என்று பயந்தான் பாலு. பசுமலையில் பவானியிடம் விசிறிக் காப்பால் பட்ட அடிகள் அவனுக்கு நினைவு வந்தது. யார் கண்ணிலும் படாமல் பள்ளிக் கூடம் போய் விட வேண்டும் என்று அவன் முயன்ற போது கோதி மாடிப் படிகளில் அவசரமாக இறங்கி வந்தாள். அவன் கிழித்துப் போட்ட நோட்டுப் புத்தகத் காதர், கையில் பிடித்துக் கொண்டே, "ஏண்டா பாலு இ து உன் வேலையா?' என்று இரைந்தாள்.

  

வியாதிக்காரியான தன் மாமிக்குக் குரல் இவ்வளவு கபளீரென்று இருந்து பாலு பார்த்ததில்லை. அவள் அவ்வளவு அவசரமாக மாடிப் படிகளில் இறங்கி வந்த தையும் அவன் கண்டதில்லை; ஆகவே வியப்புடனும் பயத்துடனும், “ஆமாம் மாமி! தெரியாமல் கிழித்து விட்டேன். இனிமேல் செய்ய மாட்டேன். அவள் மாதிரம் என்னைக் குரங்கு மூஞ்சி என்று படம் போடலாமா?" என்று கேட்டான்.

  

அவள் உன் புத்தகத்தில் தானே போட்டாள்? உன்னைப் போல் ஊரார் புத்தகத்தைக் கிழித்துப் போட வில்லையே. சே! சே! பதிமூன்று வயசுப் பையனுக்கு வகையாக இருக்கத் தெரியவில்லையே" என்று இரைந்தாள் கோமதி.

  

அம்மா இப்படி இரைந்து பாலுவைக் கோபித்துக் கொள்வாள் என்பது சுமதிக்குத் தெரியாது. தெரிந்திருந்தாள் அவனைப் பற்றி அம்மாவிடம் புகார் செய்திருக்க மாட்டாள்.

  

உள்ளே இருந்த பவானியைப் பார்த்ததும் கோமதிக்கு கோபம் அதிகமாக வந்தது.

  

இதோ பார் பவானி! உன் பிள்ளை. டாக்டர் ரீதரனின் பெண் ஜெயஸ்ரீயின் நோட்டுப்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.