(Reading time: 7 - 14 minutes)
Muthu Sippi
Muthu Sippi

Flexi Classics தொடர்கதை - முத்துச் சிப்பி (இரண்டாம் பாகம்) - 12 - சரோஜா ராமமூர்த்தி

2.12. வக்கீல் வேதாந்தம்

  

க்கீல் வேதாந்தத்தின் வீடு மயிலாப்பூரில் இருந்தது. சென்ற இருபத்தைந்து முப்பது வருடங்களில் சென்னை நகரில் பிரபலம் அடைந்திருந்த வக்கீல்களில் வேதாந்தமும் ஒருவர்.

  

தொழில் முறையில் அவர் எவ்வளவு பிரபலம் அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் நம்முடைய பழைய வழக்கங்களை விட மனமில்லாதவர். அவருடைய மனைவி சுப்புலட்சுமி, கணவன் எதிரில் நின்றுகூடப் பேசமாட்டாள். வேளைக்கொரு உடையும், நாளைக் கொரு நகையுமாக மாறி வரும் இந்தக் காலத்தில் அந்த அம்மாள் பழைய கெட்டிக் கொலுசும், கடியாரச் சங்கிலியும் செயின் அட்டிகையும் இருபத்தைந்து வருஷங்களாக அழித்துப் பண்ணிப் போட்டுக் கொள்ளாமல் இருப்பதே. அவர்கள் பழைமைக்கு மரியாதை தருபவர்கள் என்பதற்கு அடையாளம், அவர்கள் வீட்டில் செல்வம் கொழித்த அளவு சந்தான பாக்கியம் ஏற்படவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு அப்புரம் அவர்கள் செய்த தவங்களும் நோன்புகளும் ஒன்றும் பலிக்கவில்லை . காமாட்சி அவர்களின் ஒரே மகள். சங்கீதம். வடமொழி, நாட்டியம். பத்திரிகைத் தொழில் யாவும் வளர்ந்து வரும் மயிலாப் பூரில் காமாட்சியின் படிப்பை அவர்கள் மூன்றாவது படிவத்தோடு நிறுத்தி விட்டு. பதினான்கு வயசு பூர்த்தி யடைந்தவுடன், கல்யாணமும் பண்ணிக் கொடுத்து விட்டார்கள்.

  

எவ்வளவோ ஆடம்பரமாக, பெருமையாக நடந்தது அந்தக் கல்யாணம். மருமகன் செக்கச் செவேலென்று ராஜா போல இருப்பதாகத் தம்பதி இருவரும் மனம் பூரித்துப் போனார்கள். மருமகன் தங்களுடனேயே இருக்க வேண்டும் என்று வேதாந்தம் சம்பந்தி விட்டாரைக் கேட்டார். அவர்களும் அனுமதி கொடுத்து அனுப்பினார்கள்.

  

அன்று, அதாவது சுமார் பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு காமாட்சிக்கு வாழ்க்கையின் முதல் நாள். பதினாறு வயதுப் பெண் அந்த நாளை எவ்வளவோ ஆவல்களுடனும், கனவுகளுடனும் எதிர்பார்த்திருப்பாள். அவளுடைய கணவன் வீட்டிலேயே இருந்தாலும் நாள், நட்சத்திரம் முதலியவற்றில் பற்று மிகுந்த பெரியவர்கள் அவர்களைப் பிரித்தே வைத்திருந்தார்கள். கணவனிடம் மனைவி நெருங்கிப் பழக அவர்கள் சந்தர்ப்பம் அளிக்கவில்லை. கணவனுக்குத் தரும் காப்பியைக் காமாட்சி தலையைக் குனிந்து கொண்டே எடுத்துச் சென்று மேஜை மீது வைத்து விட்டுத் திரும்பி வருவாள். அவனும் மனைவியுடன்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.