(Reading time: 9 - 18 minutes)
Vata malli
Vata malli

சேரிக் கட்டிடம் மாதிரி அது... அதில் இரண்டாவது மாடிக்கு வந்து, இடது பக்கம் உள்ள நாலாவது அறைக்குள் வந்தான். எல்லா அறைகளிலும் ஏதோ ஒரு பாட்டுச் சத்தம். “யாரு கொடுத்த சேலை இந்தப் பொண்ணு மேலே...” “ருக்குமணி வண்டி வருது... ஓரம்போ...” “கன்னி மேரி தாயே...” சுயம்பு ‘சேலையில்லாத’ அந்த அறைக்குள், ருக்குமணியும், கன்னி மேரியும், காதுக்குக் கேட்காத அந்த இடத்திற்குள் போனான். அங்கே எந்தப் பாட்டுச் சத்தத்தையும், காதில் வாங்காமல், எதையோ பேசிக் கொண்டிருந்த இருவரின் கவனம் கலையும்படி, பெட்டியைச் சத்தம் போட வைத்துக் கீழே போட்டான். ஆனாலும், அந்த இருவரும், அவன் வருகையை அங்கீகரிக்காதது போல் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டார்கள். ஒருவன் மெத்தை போட்ட கட்டிலில் காலை விரித்துப் போட்டு கம்பீரமின்றி உட்கார்ந்திருந்தான். என்றாலும் அந்தப் பூஞ்சை உடம்பில், பொறி கலங்க வைப்பது மாதிரியான கண்கள். இன்னொருத்தன், கோரைப் பாயில் சம்மணம் போட்டு இருந்தான். முழுக்கறுப்பு.

  

கட்டிலில் உட்கார்ந்திருந்த மூர்த்தி, படிப்பில் ஏற்பட்ட மேடுபள்ளத்தைப் பணத்தால் நிரப்பியவன். ‘பல்லவன்’ என்ற பெயரோடு அந்தக் காலத்திலேயே கட்டப்பட்டது போன்ற அந்த விடுதிக்குக் கட்டில்கள் கிடையாது. காற்றடிக்கும் மின்விசிறியும் கிடையாது. வாட்டர்கூலருக்குப் பதில், மூடியில்லாத மண் கூஜா, ‘டிஸ்டம்பர்’ சுவருக்குப் பதிலாக, செதிள் செதிளாய்ச் சிதைந்து நிற்கும் சுவர்கள். ஆனாலும், காசு கொடுத்துக் கைமேல் சீட்டு வாங்கிய மூர்த்தி, ஒரு கட்டிலும் மெத்தையும் வாங்கிப் போட்டுக் கொண்டான். பயலுக்கு ‘சைனஸ்’ பிரச்னை. இல்லையென்றால், ஒரு மின்விசிறி கூட வாங்கியிருப்பான். இருவரும், இப்போது ஒரு நடிகையின் படத்தை ஆளுக்குப் பாதியாகப் பிரித்துக் கொண்டு ஏதோ விளக்கம் கேட்டுக் கொண்டும் பெற்றுக் கொண்டும் இருந்தார்கள். ஒருவருக்கொருவர் அப்படியே நின்ற சுயம்புவை, அவனுக்குத் தெரியாமலேயே கண்சிமிட்டிப் பார்த்துக் கொண்டார்கள். வகுப்பிற்குக் ‘கட்’ அடித்தால் கூடத் தேவலை. வாத்தியார்களுக்கு, ஓலை வெடி வைத்தால் கூடப் பரவாயில்லை. ஆனால், இந்த அழுமூஞ்சியோ, வகுப்புகள் துவங்குவதற்கு முன்பே அங்கே போகும். அவை நடந்து கொண்டிருக்கும் போதே எங்கேயோ மறையும். பிறகு இரவில் அழுது கொண்டே அறை திரும்பும். அவர்களோடு சேர்ந்து படுக்காமல், வெளியே வராண்டாவில் தூங்கும். இவர்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டார்கள். கேட்டால்தானே? நேற்றுக் கூட ஊருக்குப் புறப்பட்ட அவனை, வழி மறித்தார்கள். அவன் சூட்கேஸைக் கூடப் பறிமுதல் செய்தார்கள். ஆனால் அவனோ, தன்னை விடாவிட்டால், மாடியிலிருந்து கீழே குதிக்கப் போவதாக சவாலிட்டான். ஆகையால், அவனை இப்போது அவர்கள் சகித்துக் கொள்வதே ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.