(Reading time: 9 - 18 minutes)
Vata malli
Vata malli

  

கமலாவை... அவள் என்னடான்னா உன்னை சைட் அடிக்காள்... இப்பவாவது உச்சி குளிர்ந்ததா?... இன்னும் நீ சொல்லலன்னா ஒனக்கும் தெரியலைன்னு அர்த்தம்.”

  

முத்து, பேராசிரியர் லிங்கையா போலவே உதட்டைக் கடித்துக் கொண்டு, வயிற்றைக் குலுக்கினான். வாயே இல்லாமல் அந்த இடத்தில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பது போலவும், அதை அவிழ்க்கப் போகிறவன் போலவும், ‘மிமிக்கிரியோடு’ பேசினான்.

  

ஒரு கண்டக்டரில் - அதுதான், மின் கடத்தியில் ஏற்படும் மின் அழுத்தம், அந்த கடத்தியில் ஓடும் மின்னோட்ட அளவையும், அதன் மின் தடை அளவையும் பெருக்கினால் எவ்வளவோ, அவ்வளவு. இதுக்குப் பேருதான் ஓம்ஸ் லா... அதாவது ஓமின் விதி... இதுதான் நம்ம சப்ஜெக்டுக்கே பிள்ளையார் சுழி. ஓம்ஸ் என்பவர் இதைக் கண்டுபிடித்ததால் இதற்கு ஓம்ஸ் லா என்று பெயர்...”

  

மூர்த்தி முத்துவை வியந்து பார்த்த போது, தரையே பேசுவது போல் ஒரு சத்தம் கேட்டது.

  

அட் கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர்... அதாவது ஒரு நிலையான வெப்ப நிலையில் தான், ஓம்ஸ் லா பொருந்தும். வெப்ப நிலை மாறினால், அது லா இல்ல... கலாட்டா... இந்த லாவுக்கு கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர் என்கிற பிரிகண்டிஷன் ரொம்ப முக்கியம். இதுகூடத் தெரியாத நீங்கள்லாம் ஆம்புளைங்களாடா?”

  

மூர்த்தியும், முத்துவும் அதிர்ந்து போனார்கள். ஆனந்தமான அதிர்ச்சி, பிளஷன்ட் ஷாக். பழைய சுயம்பு, வந்து விட்டான். இனிமேல் அவனிடமே பாடத்தைக் கேட்டு, கேர்ல்ஸ்ஸுக்கு சொல்லிக் கொடுக்கலாம்...

  

மூர்த்தியும், முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே முத்து தரையில் தவழ்ந்தான். மூர்த்தியின் காலை விலக்கும்படி கண் ஜாடை காட்டிவிட்டு, பதில் சொல்வதற்காகத் தூக்கிய தலையை மீண்டும் தரையில் போட்டுக் கொண்டு குப்புறக் கிடந்தவனின் அருகே போய் உட்கார்ந்தான். அவன் கழுத்துக்குக் கீழே, தனது கையைக் கொண்டு போய் அவன் முகத்தை நிமிர்த்தினான். பிறகு அந்தக் கையை மெள்ள மெள்ள

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.