(Reading time: 10 - 20 minutes)
Vata malli
Vata malli

கட்டுப்பட்டு அப்படியே நிற்கும் இரை மாதிரி நின்றான். முன்னாள் பிள்ளைத்தாய்ச்சியை, குழந்தையும் இடுப்புமாய்ப் பார்த்தான். அவளோ, கல்யாண மாப்பிள்ளையான அண்ணன் சொன்ன சில சந்தேகங்களை மனத்தில் திருப்பிக்கொண்டு, அதே சமயம், அவசரப்படக்கூடாது என்று சில சந்தேகங்களைக் கேட்டாள்.

  

நீங்கதான் மணப்பெண்ணா?”

  

இல்ல, பொண்ணுக்குத் தங்கச்சி...”

  

பேரு...”

  

பேரா... பேரு...”

  

அவனுக்கு, உடனடியாய் பொய் சொல்லத் தெரியவில்லை. அவளோ, அவனருகே பேயாகப் போனாள். மற்றப் பெண்கள் தடுத்தும் கேளாமல், அவன் கரண்டைக் காலில் நீட்டிக்கொண்டிருந்த ஒன்றைப் பார்த்துவிட்டு அவன் சேலையை உரிந்தாள். பாவாடையோடு நின்றவனைப் பார்த்தாள். அந்தப் பாவாடைக்கு மேலே பெல்ட் போட்ட பேண்டின் வட்டம். கீழே அதே மாதிரியான, இரண்டு சின்ன வட்டங்கள். ஆரம்பத்தில் அவள்கூட கத்தப்போனாள். ஆனாலும் நிதானப்பட்டாள். அலறியடித்து அமர்க்களம் செய்யப்போன பெண்களை, பேசாமலிருக்கும்படி ஆள்காட்டி விரலை உதட்டில் வைத்து, அவர்களோடு வெளியேறினாள். கூட வந்தவர்களை மீண்டும் பேசாதீர்கள் என்பது மாதிரி சைகை செய்தாள். அண்ணன் சந்தேகப்பட்டது சரியாப் போச்சு.

  

சுயம்பு சிறிது நேரம் புரியாமல் விழித்தான்; பிறகு அவசர அவசரமாய் சேலையை மடித்து வைத்துவிட்டு, பாண்டைப் போட்டுக்கொண்டே சட்டையையும், மாட்டிக் கொண்டு வெளியே வந்தான். திண்ணைப்பக்கம் அவள்களின் முதுகுகளைப் பார்த்து, “நான் மரகதக்கா தங்கச்சி, சுயம்புவுக்கும் தங்கச்சி. சில சமயம் பாண்ட் போடுவேன். சில சமயம் சேலை கட்டுவேன். ரெண்டுமே பிடிக்கும்” என்றான். காலதாமதமான பொய். பிள்ளைத் தாய்ச்சி காலம் கடத்த விரும்பவில்லை. சுயம்புவைப் பார்த்துச் சிரித்தாள். “அங்கே போய் இருக்கோம்” என்றாள். அவனையே வெறித்துப் பார்த்த சந்திராவின் பின்னலைப் பிடித்து இழுத்தபடியே வெளியேறினாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.