(Reading time: 16 - 32 minutes)
Vata malli
Vata malli

Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 19 - சு. சமுத்திரம்

வாடா மல்லி, அத்தியாயம் - 19

  

சுயம்பு அந்த ஒன்பதாம் எண் அறைக்குள் ஒரேயடி யாய்ப் போவதுபோல் போனான்.

  

அவன் மருத்துவமனையை விட்டுப் புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புவரை, அவனை அன்பொழுகப் பார்த்த அதே அவள், இப்போது உலரவிட்ட தலைமுடியை ஒரு சேர பிடித்தபடியே அவனைப் பார்த்தாள். எழுந்து, அவன் அருகே போய், அவன் கையைப் பிடித்து ஒரு நாற்காலியில் உட்கார வைத்தாள். அந்தத் தீண்டலே அவனுக்கு ஒரு சுகமாக இருந்தது. அவளோ, அவன் அலங்கோலத்தையும், சதைச் சிதைவுகளையும் துக்கத்தோடு பார்த்துவிட்டுப் பரபரத்தாள். ‘அய்யய்யோ என்ன கொடுமைடி’ என்று அரற்றியபடியே, மலைத்து நின்றாள். அவனிடம் ஆறுதலாகப் பேசுவதற்கு மாறி மாறி முயற்சித்தாள். முடியவில்லை. வார்த்தைகளே பனிக் கட்டிகளாகி, கண்கள் வழியாகக் கசியப்போவது போன்ற நிலை.

  

அவன் செம்பட்டை மீசை வைத்துக்கொண்டது மாதிரி நீளவாக்கிலான ரத்தக்கோடு. கழுத்தில் ரத்த உழவுத் தடயங்கள். கீழே இருக்கிற மண் மேலே வருமே, அப்படி சதை தெரிந்தது. தோள்பட்டை துணி கிழிந்து, ரத்த உரைச்சலில் உறைந்து கிடந்தது. அந்தக் கம்பைப் பதிய வைத்த சின்னச் சின்னத் தடயங்கள். உச்சந்தலை கருப்பு முடியும், ஒரு சிவப்பு நிறம், உடம்பின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதோ ஒரு பாதிப்பு. கண்களிலும் அது இருக்க வேண்டும் என்பதுபோல், அது நீரைச் சுரந்தது.

  

அவள் கதவை நிதானமாக, வெளியே எட்டிப் பார்த்துச் சாத்தினாள். ஏதோ பேசப் போனவளை, வேண்டாம் என்று தலையாட்டிவிட்டு, அவன் சட்டையைக் கழட்டினான். முதுகில் ரத்தத் திரவத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த, சட்டைத்துணி வர மறுத்தது. அவள் அதைப் பிய்த்தெறிந்தாள். ஏற்கனவே இற்றுப் போயிருந்த பணியனை அற்றுப் போட்டுவிட்டு, பாண்டையும் கழற்றி, அவனை ஜட்டியுடன் நிறுத்தினாள். கட்டிலில் வைத்த பனியன் குவியலை, ஒன்று திரட்டி ரத்தக் குவியல்களைத் துடைத்தாள். ரத்தக்கோடுகளை அதன் ஒரங்களில் துடைத்து விட்டாள். அவனைக் கீழே குனித்து தலையின் ரத்தக் கசிவைப் போக்கினாள். அவன் வாதையை மெல்வது போல் பல்லைக் கடித்தான்.

  

அவள் வெளியே ஓடினாள், கதவைச் சாத்தினாள். அவன் கதவைத் தட்டியபோது அதை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.