(Reading time: 12 - 23 minutes)
Vata malli
Vata malli

Flexi Classics தொடர்கதை - வாடா மல்லி - 20 - சு. சமுத்திரம்

வாடா மல்லி, அத்தியாயம் - 20

  

சுயம்பு வழி தவறியவன் போல் அங்குமிங்குமாய் பார்த்தபடியே, அந்த வழியை ஆகாயத்திலும் தேடுவது போல் ‘அம்மா’ காட்டிய வழியில் நடந்தான்.

  

சென்னைப் பெருநகரில் மிக முக்கியமான ஒரு சாலையிலிருந்து ஒரு பாதை துள்ளிக்குதித்து மேட்டில் ஏறியது. அதில் ஆட்டோவை நிறுத்திச் சுமைகளைத் தூக்கிக் கொண்டு, தாயும் மகளுமாய் நடந்தார்கள். கூண்டிலிருந்து கீழே விழுந்து பறக்கத் தவிக்கும் காக்கைக் குஞ்சுபோல், தனித்தும் தவித்தும் கிடப்பது போன்ற பகுதி. வெளியே எதுவுமே தெரியாத மதில் சுவர். சர்க்கார் சுவர். தலைவர்களின் பாதுகாப்புக்காக, கட்டப்பட்ட ஓரச்சுவர். அதன் மத்தியில், போனால் போகிறது என்பது போல் ஒரு சைக்கிள் ரிக்ஷா போகக்கூடிய பாதை. அந்தப் ‘பெண்’ சுயம்புவின் கையைப் பிடித்துக்கொண்டு நுழைவாயிலுக்கு அருகே நின்றாள். ஒரு பக்கம் தேநீர்க்கடை மறுபக்கம் லாண்டரிக் கடை. இரு கடைகளின் உரிமையாளர்களுக்கும் ‘வந்துவிட்டேன் பாருங்கள்’ என்பது மாதிரி கண்குலுங்கச் சிரித்துவிட்டு, நடையைத் தொடர்ந்தாள். அவர்கள் லேசாய்த் தலையாட்டிச் சிரித்தார்கள். சைக்கிள் இருக்கையில் உடம்பைப் போட்டு இரு கால்களையும் முன்பக்கம் போட்டு முடங்கிக் கிடந்த ரிக்ஷா மணியை, அவள் அடித்து எழுப்பி விட்டாள். மகளிடத்தில், தனக்கிருக்கும் செல்வாக்கைக் காட்டிக் கொள்வதில் - அதற்காக செலாவணிகளைத் தேடிக் கொள்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே சமயம், அந்த மணி, தன்னைத் திட்டி தனக்கு மகளிடம் ஒரு கெட்ட பெயர் வந்து விடக் கூடாதே என்ற பயம். நல்லதனமாகப் பேசப் போன மணியை, பொல்லாப்பாய் பார்த்தபடியே இன்னொரு வளைவுப் பாதையில் திரும்பி, மளிகைக் கடைக்காரரைப் பார்த்து, கண்களால் குசலம் விசாரித்தாள். வடக்குப் பக்கம் குடிசைகளை எல்லாம் தாண்டி கம்பீரமாக இருந்த ஒரு கட்டிடத்தைப் பார்த்து நடக்கப் போன சுயம்புவை கையைப் பிடித்துத் திருப்பி, சைக்கிள் மட்டுமே தட்டுத் தடுமாறிப் போகக்கூடிய ஒரு சந்துக்குள் இட்டுச் சென்றாள்.

  

கோணிகளே, கதவுகளான குடிசைகள், மேல் கூரை போனாலும், அதைப்பற்றிய கவலையோ அல்லது கவலைப்பட்டுக் கவலை இல்லை என்ற தெளிவாலோ, நான்கு மண்சுவர் கட்டிடங்களுக்கு இடையேயே குடித்தனம் செய்கிறவர்கள். ஒற்றைக்கண் பூதம்போல், ஒரு பொந்தையே வீடாய்க் காட்டும், குடியிருப்புக்கள். கரையான் புற்றுமாதிரி ஆங்காங்கே கும்பலாய்க் கிடந்த சின்னச் சின்ன நாலுகால் கூடாரங்கள். இவைகளுக்குள், குச்சிக்கால்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.