(Reading time: 13 - 25 minutes)
Thulasi maadam - Naa.Parthasarathy
Thulasi maadam - Naa.Parthasarathy

முறையிலே வந்து உட்கார்ந்துண்டிருக்கான். மலைமேலேருந்து அத்தனை எஸ்டேட் ஓணரும் வந்தாச்சு. ரோட்டரி கிளப் மெம்பர்ஸ் பூரா ஊர்வலத்திலே காருக்கு முன்னாடி நடந்து வரா. சர்மாவுக்கு என்ன குறைங்காணும்?" என்று ஹரிஹர ஐயர் மேலும் விவரங்களைச் சொல்லிச் சீமாவையரின் வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டார்.

   

"பார்த்திண்டே இரும்! பகவான் ஒருத்தன் இருக்கான். இந்த அக்ரமம் பொறுக்காமே அவன் ஏதாவது பண்ணத்தான் போறான். தெய்வக் குத்தம் சும்மா விடாது" - என்று கையைச் சொடுக்கி நெரித்தார் சீமாவையர். அவரால் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது.

   

"நமக்குப் பிடிக்கறதோ பிடிக்கலியோ! நல்ல காரியம் நடக்கறபோது துக்கிரி மாதிரி ஏன் இப்படிக் கையைச் சொடக்கி அஸ்துப் பாடணும்? பேசாம இருமேன்" - என்று ஹரிஹர ஐயரே தமது செயலைக் கண்டு அருவருப்பு அடைந்தபோது சீமாவையருக்குச் சிறிது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. கேஸ் தோற்றுப் போய்த் தள்ளுபடியாகிய பின் தான் வலிந்து தன்னுடன் சர்மாவை எதிர்க்கக் கட்சி சேர்த்தவர்களில் பலரும் சோர்ந்து துவண்டு போயிருப்பது சீமாவையருக்கே மெல்ல மெல்லப் புரிந்தது. அதிகநாள் அவர்களை எல்லாம் சர்மாவின் எதிரிகளாக நிறுத்தி வைத்துத் தொடர்ந்து சர்மாமேல் விரோதத்தையும் வெறுப்பையும் ஊட்டிக் கொண்டிருப்பது என்பது நடவாத காரியமாக இருக்குமோ என்று அவருக்கே தோன்றியது. இறைமுடிமணிமேல் பொய் வழக்குப் போடப் போக அவர் வேறு, சீமாவையரைப் போன்ற வேஷதாரிகளைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை என்று ஆக்ரோஷமாகக் கிளம்பியிருந்தார். சீமாவையருடைய கேடுகாலம் ஆரம்பமாகியிருந்தது. சர்மா போன்ற ஆஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இறைமுடிமணி போன்ற நாஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இருவருடைய விரோதத்தையும் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். நேர்மாறாகச் சர்மா இருசாராருடைய அன்பையும் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தார். சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. கோயில் கேஸ் தள்ளுபடியான பின் சீமாவையரின் மதிப்பு ஊரில் குறைந்திருந்தது. என்றாலும் அவரது அடாவடித் தனங்கள் என்னவோ குறையவில்லை. கடைசி முயற்சியாகச் சமையற்காரரைக் கலைத்து விட்டோ புரோகிதரைக் கலைத்து விட்டோ கல்யாணத்தைக் கெடுப்பதில் முனைந்து பார்த்துத் தோற்றிருந்தார் சீமாவையர். சீமாவையருக்கு இருந்த சமூக அந்தஸ்தைவிட அதிகமான சமூக அந்தஸ்தும், படிப்பும், பணச் செல்வாக்கும் வேணு மாமாவுக்கு இருந்ததனால் சீமாவையரின் எதிர்ப்பை அவர் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணவே இல்லை.

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.