தைரியம் கூறினார் மணி.
ராமபத்திரய்யர் கண்களில் உணர்ச்சிப் பெருக்கினால் நீர் நிறைந்தது. 'ஆமாம். ஜாதகமும், ஜோஸ்யமும் மனிதனாகவே மனத்தைக் குழப்பிக் கொள்ளும் விஷயங்கள் தாமே? இவைகளை மீறக் கூடிய சக்தி—அக்ஞை ஒன்று பகவத் அனுக்ரகம் என்று இருக்கிறதல்லவா? அது ஏற்பட வேண்டும். காமுவுக்கு என்று புருஷன் இனிமேலா பிறக்கப் போகிறான்?' என்று மனத்துக்குள் எண்ணமிட்டவர், “அப்படியானால் தோஷ ஜாதகம்தான் பொருந்தும் என்று சொல்லு” என்று ஹீனஸ்வரத்தில் திரும்பவும் நப்பாசை விடாமல் மணியைப் பார்த்துக் கேட்டார்.
"ஆமாம். ஜாதகத்தைப் பொறுத்த வரையில் அங்காரக தோஷம் பரிபூரணமாக இருக்கிறது, சுத்த ஜாதகம் எதுவும் இதோடு பொருந்தாது" என்றார் மணி.
அப்படி அங்காரக தோஷமுள்ள ஜாதகம் ஏதாவது கிடைத்தாலும் வரதட்சிணை தோஷம் அதற்குக் குறுக்கே நின்றது. தவிர கலாசாலைப் படிப்போ, சங்கீதமோ, நடனமோ ஒன்றும் தெரியாத காமுவை ஏற்பதே ஒரு தோஷம் என்று சிலர் கருதினார்கள். காமு இப்படி இருபது வயசு வரையில் கல்யாணம் ஆகாமல் பெற்றவர்களுக்குக் கவலையை ஏற்படுத்தி வந்தாள்.
சோர்ந்த முகத்துடனும், கவலை நிரம்பிய உள்ளத் துடனும் ராமபத்திரய்யர் ஜோஸ்யர் மணியிடம் விடை பெற்றுக் கொண்டு பொன்மணிக்குக் கிளம்பினார்.
களைத்துப் போய் அவர் வீட்டினுள் நுழைந்ததும், "அப்பா" என்று காமு ஏதோ சொல்ல வந்தாள்.
"இருக்கட்டும், அம்மா. முதலில் கொஞ்சம் மோர் தீர்த்தம் கொண்டுவா. ரொம்பவும் களைப்பாக இருக்கிறது” என்று சொல்லிக் கொண்டே ஊஞ்சலில் ஆயாசத்துடன் சாய்ந்து கொண்டார் ராமபத்திரய்யர்.
மோரைக் கொண்டு வந்து வைத்து விட்டு, தகப்பனார் தன்னால் படும் கவலையையும், கஷ்டத்தையும் நினைத்து வருந்திக் சொண்டே நின்றாள் காமு. படுத்திருந்தவர் கண்ணை மூடிக் கொண்டே இருப்பதைப் பார்த்து, "அப்பா! மோர் கேட்டீர்களே, கொண்டு வந்து