(Reading time: 22 - 44 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 02 - சரோஜா ராமமூர்த்தி

காமுவின் கண்ணீர்.

   

சங்கரனின் தகப்பனார் நடேச சர்மாவின் குணமும், போக்கும் அலாதியானவை. அவர், எதையும் தன்னுடைய உரிமையோடு செய்யக் கூடிய மனம் படைத்தவர் அல்ல. சம்பாதிக்க வேண்டியது ஒன்றுதான் தன்னுடைய கடமை களில் ஒன்று என்று நினைத்திருந்தவர். அவர் வீட்டில் அவர் மனைவி மீனாட்சி அம்மாள் இட்டதுதான் சட்டமாக இருந்தது. வீட்டில் வேலை செய்யும் வேலைக்காரர் களிலிருந்து பெரிய விவகாரங்கள் வரையில் மீனாட்சி அம்மாளின் இஷ்டப்படி தான் நடந்து வந்தன. வேலைக் காரர்களுக்கு முன் பணம் கொடுக்க வேண்டுமா, பெண்ணை சீர் வகையறாக்களுடன் புத்தகம் அனுப்ப வேண்டுமா, காலேஜுக்குப்' பிள்ளைக்குச் சம்பளம் கட்டவேண்டுமா, எல்லா விவகாரங்களும் அம்மாளின் இஷ்டப்படிதான் நடக்கும்.

   

அன்று சாப்பாட்டுக்கு அப்புறம் கையில் வெற்றிலைத் தட்டுடன் கூடத்தில் வந்து உட்கார்ந்தாள் மீனாட்சி அம்மாள். பச்சையும், அரக்கும் கலந்து கட்டம் போட்ட ஆரணிப் பட்டுப் புடவை உடுத்தி, இரண்டு மூக்குகளிலும் வைர பேசரிகள் ஜிலுஜிலுவென்று ஜ்வலிக்க ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டே உட்கார்ந்தாள்.அவள் காதில் தொங்கிய வைரக் கம்மல்கள் நட்சத்திரங்களைப்போல் சுடர் விட்டன. கையில் புதையப் புதைய கொலுசும், பம்பாய் வளையல் களும், சழுத்தில் வைர முகப்பு வைத்த மூன்று வடம் சங்கிலி யும், முகத்தில் அலாதியாக வீசிக் கொண்டிருந்த லட்சுமி கடாட்சமும் அந்த அம்மாளைப் பார்ப்பவர்களுக்குப் பரவசம் ஊட்டின. நெற்றியில் வட்ட வடிவமான குங்குமத் தின் மேல் சிறியதாக விபூதியும் இட்டிருந்தாள்.வயசு ஐம்பதுக்கு மேல் இருந்தாலும் தாழை மடலைப் போன்ற நிறமும், மூக்கும் விழியும்; அவளால் தான் நடேச சர்மா அதிர்ஷ்டத்தில் கொழிக்கிறார் என்று சொல்லும்படி இருந்தன.

   

வெற்றிலைக்குச் சுண்ணாம்பைத் தடவிக்கொண்டே ஒரு கொட்டைப் பாக்கை எடுத்து பாக்கு வெட்டியால் 'கடக் கடக்'கென்று வெட்டித் துருவலாகச் செய்து வாயில் போட்டுக் கொண்டாள் மீனாட்சி. பிறகு ஒவ்வொன்றாக வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தடவி வாயில் போட்டு மென்று கொண்டே, **6 501 607 IT! இன்னிக்கி தபாலில் சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா?" என்று சர்மாவைப் பார்த்துக் கேட்டாள் அவள்.

   

இது வரையில் மனைவி வந்து அமர்ந்து வெற்றிலை போடுவதையோ, வேறொன்றையோ கவனிக்காமல் பத்திரிகை படித்துக்கொண்டிருந்தார் சர்மா. மனைவி கேட்டதும் தினசரியை மேஜை மீது வைத்து விட்டு, "நேற்றே கடிதம் வந்ததே உன்னிடம் சொல்ல மறந்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.