(Reading time: 22 - 44 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

விட்டேன்.ராஜம்பேட்டையில் நான் படித்துக்கொண்டிருந்த போது. என்னுடைய சிநேகிதன் ஒருவனைப்பற்றி உன்னிடம், அடிக்கடி சொல்லி இருக்கிறேனே நினைவிருக்கிறதா உனக்கு?" என்று கேட்டார் சர்மா.

   

"எல்லாம் தெரியும். ராமபத்திரனைத் தானே சொல் கிறீர்கள்? ஆயிரம் தடவை ‘ஸ்ரீ கிருஷ்ணனும், சுதாமா'வும் போல் நீங்கள் குருகுலவாசம்' செய்ததைச் சொல்லி இருக்கிறீர்களே! மறந்தா போய் விடுவேன் நான்?" என்று அவளுக்கே உரித்தான ஒருவித அலட்சியத்துடன் கூறினாள் மீனாட்சி.

   

'பணமும். பாக்கியமும் நாமே தேடிக் கொள்பவை அல்ல, சிலர் பிறக்கும்போதே போக பாக்கியங்களை அனுபவிக்கவே பிறக்கிறார்கள். சிலர் அவைகளை அடைய வேண்டும் என்று எவ்வளவு முயற்சி செய்தாலும் கிட்டுவ தில்லை. ராமபத்திரன் என்னைவிடப் படிப்பில் மிகவும் கொரன் எனக்குச் சந்தேகம் ஏற்படும் போதெல் லாம் அவனிடமிருந்து நான் பாடங்களைக் கற்றுத் தெரிந்திருக்கிறேன். ஆனால், அவன் இன்றும் மாசம் நாற்பது ரூபாய்க்கு மேல் கண்ணால் பார்க்க வில்லை" என்றார் சர்மா.

   

மீனாட்சி அலுப்புடன் தூணில் சாய்ந்து கொண்டாள். பிறகு நிதானமாக, "ஆமாம், சங்கரனிடமிருந்து ஏதாவது கடிதாசி வந்திருக்கா என்று கேட்டால் நீங்கள் பாட்டுக்கு எதையோ சொல்லிக் கொண்டு போகிறீர்களே?" என்றாள்.

   

"சம்பந்தம் இல்லாமல் பேசவில்லை மீனு. ராமபத்திரன் ராஜம்பேட்டைக்கு அருகே பொன்மணியில் இருக்கிறானாம். சங்கரன் அவனைப் போய்ப் பார்த்து நிலங்களைப் பற்றி விசாரித்ததாகவும், அப்போது ராமபத்திரன் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்து தன்னுடன் வந்து இருக்க வேண்டும் என்று உரிமையுடன் கோபித்துக் கொண்டதாகவும் எழுதி இருக்கிறான். 'பணம் காசு குறைவாக இருக்கிறதே ஒழிய தாராள மனசும், கருணையும் நிறைய இருக்கிறது” என்று சங்கரன் எழுதி இருக்கிறான்.”

   

சர்மா நண்பனைப் பற்றிய பெருமையில் லயித்து மேலும் பேசுவதற்குள் மீனாட்சி, 'த்சூ” என்று ஒரு பெரு மூச்சு விட்டாள். பிறகு கூடத்தின் மூலையில் வைக்கப் பட்டிருந்த ரத்தினக் கம்பளத்தை எடுத்து விரித்துக் கொண்டு படுத்தாள். சட்டென்று ஏதோ நினைவு வந்தவள் போல், "ஏன்னா! இவன் பாட்டுக்கு ஒரு மாசமா அங்கே போய் உட்கார்ந்திருக்கானே? அந்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.