(Reading time: 22 - 44 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

தெரிகிற தில்லை இவர்களுக்கு! ஒருத்தருக்கு அரை ஆழாக்கு ரவை வேண்டுமானால் நாலு பேருக்கு கால்படி என்று அளந்து, உப்பை நிறுத்து, தாளிதம் செய்ய வேண்டிய சாமான்களை நிறுத்து எதற்கு எடுத்தாலும் தராசையும் படியையும் தேட வேண்டியிருக்கு. வாணலியைப் போட்டுக் கண் திட்டத் திற்கு நெய்யோ. எண்ணெயோ ஊற்றி உத்தேசமாக ரவை யைக் கொட்டிக் கிளறி விடுவாள் என் சம்சாரம். நாலு பேருக்கு மேல் இரண்டொருத்தர்கூட சாப்பிடலாம்."

   

மகாதேவன் இவ்விதம் கூறிவிட்டு, நீலாவைப் பார்த்துச் சிரித்தார். நீலாவின் சிவந்த முகம் மேலும் கோபத்தால் சிவந்தது. ஜிவ்வென்று பறந்து போகும் புறாவைப்போல் மெல்லிய வெண் மஸ்லின் மேலாக்குப் பறக்க மாடிப்படி களில் ஏறி உள்ளே போய் விட்டாள்.

   

"அடடா! நீங்கள் தமாஷுக்குச் சொனதை நிஜம் என்று கோபித்துக் கொண்டு விட்டாளே குழந்தை?" என்று அனுதாபப்பட்டார் சர்மா.

   

"அவளுக்குத் தொட்டதற்கெல்லாம் கோபம் வரும், சார்! கொஞ்சம் செல்லமாக வளர்ந்த பெண்" என்று பெருமையுடன் கூறினார் டாக்டர்.

   

சர்மா வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பு மகாதேவன், "நாளைக்கு வெள்ளிக்கிழமை. ஜாதகம் கேட்பதற்கு உங்கள் வீட்டிற்கு ராகு காலத்துக்கு மேல் வருகிறேன். பிறகு உங்கள் வீட்டிலிருந்து பெண்களும் வந்து நீலாவைப் பார்க்கட்டும்" என்றார்.

   

"ஆகட்டும். யோசித்துச் சொல்லுகிறேன்.சங்கரன் ஊரில் இல்லை" என்று கூறிவிட்டு வந்து விட்டார் சர்மா.

   

அதன் பிறகு டாக்டர் மகாதேவன் இரண்டு மூன்று தடவைகள் சர்மாவின் வீட்டிற்கு ஜாதக விஷயமாகப் போயிருந்தார். அப்பொழுது சர்மா வீட்டில் இல்லை. அவர் மனைவி மீனாட்சி அம்மாளே மகாதேவனுடன் பேசும்படி நேரிட்டது. இன்னொருவருடைய குடும்ப விவகாரங்களை விசாரிப்பதில் ஆண்களை விடப் பெண்களுக்கு சாமர்த்தியம் அதிகம். நொடிப் பொழுதில் மகாதேவனைப் பற்றியும், அவர் அந்தஸ்தைப் பற்றியும், அவர் பெண் நீலாவைப் பற்றி யும் மீனாட்சி அறிந்து கொண்டாள். மூத்த நாட்டுப் பெண் சம்பகத்தைப் போல் இல்லாமல் நீலா. பணக்காரியாக இருப்பது அவள் மனத்துக்கு ஆறுதலாக இருந்தது. 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.