(Reading time: 22 - 44 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

அண்டாவிலிருந்து குடம் வரைக்கும் வெள்ளிப்பாத்திரங்கள் வாங்கவும், தங்க முலாம் பூசிய டீ செட்டுகள் வாங்கவும் சந்தர்ப்பம் இருக்கிறது என்று நினைத்துச் சந்தோஷப் பட்டாள் மீனாட்சி. சீரும். சிறப்புறமாகத் தடபுடலாக சங்கரனின் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்கிற ஆசை யால் ஒவ்வொரு நாளும் மகாதேவனிடம் சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்துவிடத் துடித்துக் கொண்டிருந் தாள் அவள்.

   

சர்மா தீர்மானமாகத் தன் அபிப்பிராயத்தை அவளிடம் ஒன்றும் கூறாததால் மீனாட்சி சிறிது தயங்கிக் கொண் டிருந்தாள். வலிய வரும் ஸ்ரீதேவியை உதைத்துத் தள்ளுவது போல் இருந்தது சர்மாவின் மௌனம். அவர் சம்மதம் தெரிவிக்கா விட்டாலும் அடுத்த முறை மகாதேவன் வரும் போது கட்டாயமாக சங்கரனின் ஜாதகத்தைக் கொடுத்து விடுவது என்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

   

------

   

பொன்மணி கிராமத்தில் சங்கரன் காமுவின் வீட்டிற்கு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தான். அவன் வரும் போதெல்லாம் ராமபத்திரய்யர் அவனுக்கு ஆசார உபசாரங்கள் செய்தார். பெரிய அந்தஸ்தில் இருக்கும் தன் நண்பனின் பிள்ளை தன் வீட்டைத் தேடி வந்து இவ்வளவு சரளமாகப் பழகுவது அவருக்கு ஆனந்தத்தை அளித்தது. நகரவாசத்தில் கிடைக்காத ருசியுள்ள அநேக பதார்த்தங்களைச் சமைத்துப் போடும்படி விசாலாட்சியிடம் கூறினார். கொல்லையில் விளைந்த முளைக்கீரையை மோர்க் கூட்டு செய்யும்படி கூறினார். பிஞ்சுக் கத்திரிக்காயை எண்ணெய்க் கறி செய்து போட்டாள் விசாலாட்சி.

   

எல்லாவற்றிற்கும் மேலாக ராமபத்திரய்யரின் அன்பு சங்கரனின் மனத்தை நெகிழச் செய்தது. பட்டினத்தில் தன் வீட்டில் இருக்கும் பெண்களிடம் இல்லாத ஒரு பெருந் தன்மையைக் காமுவின் குணத்தில் கண்டான். அன்பும் அறிவும் அவள் கண்களில் சுடர் விட்டன.

   

மதனி சம்பகம் சதா துக்கத்தில் மூழ்கி இருப்பவள். என்னதான் அவள் சிரிக்க முயன்றாலும் துயரம் ததும்பும் அவள் பார்வை மனசைக் காட்டிக் கொடுத்து விடும். தமக்கை ருக்மிணியின் அகம்பாவமும், யாரையும் மதியாத குணமும் அவனுக்கு அவளிடம் உள்ளூர ஒருவித வெறுப்பை ஏற்படுத்தி விட்டிருந்தன. தாயாருக்கு, பணத்தைத் தவிர வேறு ஒன்றையும் உலகத்தில் முக்கியமாக நி னைக்கும் சுபாவம் கிடையாது. தானும், தன் குழந்தைகளும் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.