இருக்காது. சுமாராக லட்சணமாகத்தான் இருப்பாள். உனக்கு வேண்டுமானால் பார்க்கலாம் என்று தோன்றுகிறது. உன் அப்பாவுக்கு எழு தட்டுமா,சங்கரா?" என்று ஆரம்பித்தார் ராமபத்திரய்யர். சங்கரனோ, சாட்சாத் சங்கரன் கைலையில் உமாதேவியைப் பார்த்துப் பரவசமடைந்திருந்த நிலையில் இருந்தான் காமுவைப் பார்த்தபடி. சட்டென்று சுய உணர்ச்சி அடைந்தவனாக, "சே, சே, எனக்கு என்ன மாமா கல்யாணத்துக்கு அவசரம்?" என்று அசடு வழியக் கூறிவிட்டு ராஜம்பேட்டைக்குப் புறப்படுவதற்காக ஊஞ்சலை விட்டு எழுந்தான்.
பாதி திறந்திருந்த கதவின் வழியாகக் காமு சங்கரனைப் பார்த்தாள். நேருக்கு நேர் பார்க்கக் கூசிய கண்கள் இப்பொழுது திருட்டுத்தனமாகப் பார்ப்பதால் கூசவில்லை போலும்! கையில் பின்னும் தாமரைச் சவுக்கத்தில் எவ்வளவோ தவறுகள் நேர்ந்திருப்பதை அவள் கவனிக்க வில்லை. சங்கரன் கிளம்பியதும் காமரா அறையின் கதவை லேசாகத் திறந்து கொண்டு வாயிற்படி அருகில் நின்றாள் சாமு.
"அப்பா! இன்னும் அரை மணியில் காபி ஆகிவிடும். சாப்பிட்டுவிட்டுப் போகச் அவரைச் சொல்லுங்கள்” என்றாள் பதவிசாக.
"சாப்பாடே ஒரேயடியாகத் திணறுகிறது! அதற்குள்ளாகவா காபி சாப்பிட முடியும். நாளைக்கு வருறேன் மாமா காபி சாப்பிட!" என்று ராமபத்திர அய்யரைப் பார்த்துக் கூறிவிட்டுப் புறப்பட்டான் சங்கரன்,
சங்கரனை வழி அனுப்ப வாசல் வரையில் போய் விட்டு வந்த ராமபத்திரய்யர் கையில் ஒரு தபால் கவருடன் ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார்.
கடிதம் விசாலாட்சியின் ஒன்றுவிட்ட தம்பி முத்தையாவிட மிருந்து வந்திருந்தது. நாலைந்து வருஷங்களாக அவனிடமிருந்து தகவல் ஒன்றும் அதிகமாகத் தெரியாமல் இருந்தது. திடீரென்று ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு அவன் இரண்டாவது மனைவி தவறிப்போன செய்தியைத் தாங்கிய கடிதம் ஒன்று வந்தது. முதல் மனைவி தவறிய இரண்டு மாசங்களுக் கெல்லாம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக் கொண்டான். முதல் மனைவிக்கு மூன்று குழந்தைகள் இருந்தார்கள். முத்தையாவுக்கும் வயசு முப்பத்தி ஒன்றுக்கு மேல் ஆகாமல் இருந்ததால் அவனுடைய இரண்டாவது கல்யாணத்தைப் பற்றி யாரும் அவ்வளவாகக் குறை -