(Reading time: 22 - 44 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

இங்கே என்ன வேலை பாழாய்ப் போகிறது?" என்று சற்று உரக்கக் கூறியவாறு விசாலாட்சி கொல்லை வாசற் படியில் வந்து நின்றாள். ராமபத்திர அய்யர் திடுக்கிட்டுத் திரும்பிய போது அவள், "சங்கராந்தி போய் காரடை நோன்பும் வரப் போகிறது! பார்த்துக் கொண்டே இருந் தால் ஆடி பிறந்து மறுபடியும் தை பிறக்கக் காத்துக் கொண்டிருக்க வேண்டியதுதான். கன்யாகுமரி மாதிரி வளர்ந்து நிற்கிறது பெண். வெளியிலே தலை காட்ட முடிய வில்லை..." என்றாள் படபடப்போடு.

   

விசாலாட்சி கோபத்துடன் பேசுவதன் காரணத்தை. அவர் ஒருவாறு ஊகித்துக் கொண்டவராக, "இப்போ என்னை என்ன செய்யச் சொல்றே?" என்று கேட்டார்.

   

"முத்தையாவின் கடுதாசிக்கு என்ன பதில் எழுதப் போகிறீர்கள்?' என்று பளிச் சென்று கேட்டாள் விசாலாட்சி.

   

"அவனுக்கு வயசாகிறதே ஒழிய புத்தி இல்லையே? நாற்பது வயதுக்கு மேலே என்ன கல்யாணம் வேண்டி இருக்கிறது? பெண்ணுக்குக் கல்யாணம் பண்ண வேண்டுமானால் இவன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டுமா என்ன? நாலு காசை விட்டெரிந்தால் நான் நீ என்று யாராவது செய்து விட்டுப் போகிறார்கள்? பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் ஆனதும் தெரிவித்தால் நீதான் போய் எல்லாவற்றையும் கவனித்துச் செய்து விட்டு வாயேன்.''

   

"உங்களிடம் அவன் என்ன யோசனையா கேட்டிருக் கிறான்?" என்றாள் விசாலாட்சி கொஞ்சம் பரிகாசமாக.

   

"வயசாகியும் புத்தி இல்லையே என்று தான் சொல்லுகிறேன். சங்கரன் இருக்கிறோனே, என்ன அறிவுடன் பேசுகிறான்?” என்றார் ராமபத்திரய்யர்.

   

'என் தம்பி ஒன்றும் அறிவு கெட்டுப் போகவில்லை. சங்கரன் என்னவோ பிரமாதமாகச் சாதிக்கப் போகிறான் என்று நினைத்துக் கொண்டிருங்கள். பணம் பணத்தோடு தான் சேரும். நாலாயிரம் பிள்ளை நாற்பது ரூபாய் சம்பாதிக்கிறவர் பெண்ணைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளத்தான் வந்திருக்கிறான், பொன்மணியை தேடிக் கொண்டு.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.