(Reading time: 16 - 32 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

பார்த்தான். தா கணவனை நினைத்து உருகும் மன்னி சம்பகத்தையும் நினைத்தான். தன்னால் ஏமாற்றப்பட்ட காமுவின் களை நிறைந்த மோகன உருவத்தை நினைத்துக் கொண்டான். அவன் கையிலிருந்து உதறிக் தள்ளிய பட்டுப் புடவை மடிப்புக் கலைந்து கீழே விழுந்து கிடந்தது.

   

கீழே சம்பகத்துக்காக அவன் வாங்கி வந்த புடவை மடிப்புக் கலையாமல் சுவாமி. அலமாரியின்கீழ் வைக்கப் பட்டிருந்தது. கொதிக்கும் உள்ளத்திலிருந்து பொங்கி வரும் துக்கத்தைஅடக்க முடியாமல் சம்பகத்தின் கண்கள் இரண்டு துளி கண்ணீரைச் சிந்தின. புதுப் புடவையின் மீது, அதுவும் கரும்பச்சைப் புடவை மீது அவை முத்துப் போல் உருண்டு நின்றன.

   

இவ்வளவு பேச்சுக்களையும் சகித்துக் கொண்டு அவளுக்கு அந்த வீட்டில் வாழ்வதற்கு என்ன காத்துக் கிடக்கிறது? என்றாவது அவள் கணவன் தாய் நாடு திரும்பி வருவான். சம்பகத்தின் வரண்டு போன வாழ்க்கை பசுமை பெறும் என்னும் நம்பிக்கை தான் காரணம். கணவன் வரவை எதிர்பார்த்து வாடும் மங்கையும், கணவன் தயவின்றித் தன்னால் வாழ முடியும் என்கிற பெண்ணும் ஒரே வீட்டில் வாழ்ந்தார்கள். காதலும், அன்பும் கொண்டு கணவனுடன் வாழ வேண்டியவள் அவனை உதறித் தள்ளுகிறாள். காதலும். அன்பும் கிட்டாதா என்று ஏங்கி மடிகிறாள் சம்பகம். அதற்காகவே இவ்வளவு பேர்களுடைய கொடுமை களையும் அவள் சகித்து வந்தாள். கொடுமைகளைச் சகிக்க லாம், நிஷ்டூரங்களைப் பொறுக்கலாம். அலட்சியங்களைச் சமாளித்து விடலாம். ஆனால், பெண்மைக்கே மாசு கற்பிப் பதைக் சகிக்க முடியுமா? அதுவும் படித்த ஒரு பெண்ணாலேயே அவ்விதம் சந்தேகிக்கப்படும்போது சம்பகத்தின் மனம், நொந்த ஒவ்வொரு சொல்லும் ஊசி போல் அவள் உடலெங்கும் குத்தியது.

   

நீலா அவனைச் சந்தேகிக்கிறாள். சங்கரனின் தூய அன்பையும் குரோதக் கண்கொண்டு பார்க்கலாம். நாளடைவில் இந்த அற்ப சந்தேகங்கள் விசுவரூபம் எடுத்துவிடும். பிறகு வெறும் வாயை மெல்லும் மாமியாருக்கு ஒரு பிடி அவல் அகப்பட்ட மாதிரிதான். நாத்தனார் வேறு அதற்குக் கண், காது, மூக்கு வைத்து விடுவாள். இன்னொரு தடவை சங்கரன் அவளிடம் பேசவரும் போதோ, அல்லது அவளாகவோ அவனிடம் நிலைமையைக் கூறிவிட வேண்டியது. இல்லாவிடில் எவ்வளவு கஷ்டங்கள் இருந் தாலும் பிறந்த வீட்டுக்காவது சென்று இருந்து விடுவது. அதுவும் சௌகரியப்படாவிடில் நர்ஸ் உத்தியோகத்துக்கோ, உபாத்தியாயினி தொழிலுக்கோ படித்து, வேலைக்குப் போய் விடவேண்டும்.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.