(Reading time: 19 - 38 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

Flexi Classics தொடர்கதை - பனித்துளி - 08 - சரோஜா ராமமூர்த்தி

காமு கலங்கவில்லை!
   

தோட்டத்தில் நிலா வெளிச்சத்தில் மைத்துனனும், மன்னியும் என்ன ரகசியம் பேசுகிறார்கள்? பால்போல் நிலா காய்கிறது. செ. கொடிகள் புஷ்பித்து வாசனையை வீசுகின்றன. கணவன் இல்லாமல் பாலைவனத்து நிலவு போல் குன்றிப் போகும் இளமையுடன், சங்கரன் எதிரே மன்னி சம்பகம் உட்கார்ந்திருக்கிறாள். நீலா படித்த பெண் தான்! சமத்துவம் பேசுபவள்தான். இருந்தாலும் அவள் கணவனுடன் இன்னொரு பெண் தாராளமாகத் தனிமையில், நிலவு வீசுபு இரவில் உட்கார்ந்து பேசுவதைச் சகிக்கும் தியாக உளத்தைப் படைத்தவள் இல்லை. 'சரக் சரக்’ கென்று ஈருப்பு பூமியில் வேகமாய் உராய மாடிப் படிகளில் ஏறிச் சென்றாள் நீலா.

   

உடை மாற்றிக்கொண்டு கீழே அவள் இறங்கி வந்த போகூடத்தில் வழக்கமாக எரிந்து கொண்டிருக்கும் குழல் விளகும் அணைக்கப்பட்டிருந்தது. தனது அறை வாசல் தியை நீக்கி நீலாவைப் பார்த்து விட்டு, ருக்மிணி 'விசுக், ஒன்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.

   

சாப்பிடும் இடத்தை நீலா அடைந்தபோது, மையற்கார மாமி சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறையைச் சுத்தமாக அலம்பி, கோலம் போட்டு வைத்திருந்தது. அந்த அறையின் மூலையில் பாத்திரங்கள் மூடி வைத்திருப்பதிலிருந்து, அவளுக்காக சாப்பாட்டை மூடி வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்டாள் நீலா. குடத்திலிருந்து ஒரு டம்ளர் நீர் எடுத்துக் குடித்துவிட்டுக் கோபத்துடன் மாடிக்குத் திரும்பும்போது அவள் எதிரில் சம்பகம் வந்தாள்.

   

"சாப்பிட வா அம்மா. நான் கையில் பிசைந்து. போடுகிறேன்" என்று உரிமையுடனும். அன்படனும் அவள். ஓரகத்தியை அழைத்தாள்.

   

நீலாவின் உள்ளத்தில் வெந்தழல் போல் கோபம் ஜ்வாலைவிட்டு எரியத் தொடங்கியது. அது ஒன்றுதான் குறைச்சல் எனக்கு" என்று கூறிவிட்டு சம்பகத்தின் பதிலை எதிர்பாராமல் மாடிக்குப் போய் விட்டாள் நீலா.

   

"இப்படியும் ஒரு சுபாவமா!" என்று அதிசயித்தாள் சம்பகம். மைத்துனன் மனத்தில் மனைவியைப் பற்றி மாமியாரும் நாத்தனாரும் ஏதோ கருவேற்றி இருக் கிறார்கள் என்பது சங்கரன் சற்றுமுன் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.