(Reading time: 19 - 38 minutes)
Panithuli - Saroja Ramamoorthy
Panithuli - Saroja Ramamoorthy

தோட்டத்தில் அவளைப் பார்த்து நீலாவைப் பற்றிக் கேட்டதும் தெரிந்து சம்பகம் கவலையோடு மறுபடியும் தோட்டத் துக்குப்போய் உட்கார்ந்து கொண்டாள். மாடியிலே மைத்துனன் அறையில் கணவனும் மனையும் தர்க்க மிடுவது பட்டதும் படாததுமாக அவள் செவியில்விழுந்தது. அறையின் ஜன்னல் திரையை விலக்கிவிட்டு அதன் அருகில் நாற்காலியில் உட்கார்ந்திருந்தான் சங்கரன்.

   

"சாப்பிட்டாயா?"

   

"................"

   

"உன்னைத்தான் கேட்கிறேன்!"

   

"ரொம்பவும் கரிசனம் உங்களுக்கு!" நீலான் வார்த்தைகள் மெதுவாக, ஆனால் அழுத்தமாக வெளிவந்தன.

   

''உனக்குத்தான் என்னிடம் கரிசனம் அதிகம் என்று சங்கரன் பாதி கேலியாகவும், பாதி கோபமாகவும் கூறினான்

   

"நம் இரண்டு பேருக்கும்தான் ஒருத்தர் மேல் ஒருத்தருக்கு அக்கறை இல்லையே; உங்களுக்காவது உங்கள் மதனி பேரில் அன்பு பொங்கி வழிகிறது!"

   

"ஆமாம், பாவம்! அவளைப் பார்த்தால் எனக்கு க்கமாகத்தான் இருக்கிறது. பாவம்!” என்று சங்கரன் தொண்டை கரகரக்கக் கூறினான்.

   

"அதான் தோட்டத்தில் இரண்டு பேரும் தனியாகப் பேசிக் கொண்டிருந்தீர்கள் போல் இருக்கிறது!»

   

நீலா இந்த வார்த்தைகளைக் கூறும்போது வழக்கத்தை விட உரக்கப் பேசினாள் சம்பகத்தின் உள்ளமும், உடலும் பலமுறை நடுங்கின.

   

"அதிகப்பிரசங்கி! வாயை மூடு! பெரியவர்கள் என்று மரியாதை இல்லாமல் என்னவெல்லாமோ உளறுகிறாய்!" சங்கரன் ஆத்திரத்துடன் எழுந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.