(Reading time: 19 - 38 minutes)
Thazhampoo - Su Samuthiram
Thazhampoo - Su Samuthiram

வாழப்பழமா கொழய வச்சு, எல்லாப் பக்கமும் ஊசியாலே குத்திட்டிங்களே. ஆனால், என்ன மாதிரி போலீஸ், கிராமப்புறத்துல இந்த மாதிரி டெக்னிக்கை பயன்படுத்துறது இல்ல சார். பேக்ரவுண்ட் உள்ளவன் முன்னால, பேக்ரவுண்ட் இல்லாதவனை எடுத்த எடுப்பிலேயே 'தேவடியா மகனே'ன்னு கேட்போம். அவனோட பெண்டு பிள்ளைகளையும் வாய்க்கு வந்தபடி திட்டுவோம். பேக்ரவுண்ட் உள்ளவன் பயந்துடுவான். சரி... விஷயத்துக்கு வருவோம்... சுதந்திர தினத்துக்கு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யணுமே?"

   

“சுதந்திரத்துக்கும் நமக்கும் என்னப்பா சம்பந்தம்? எப்போ போலீசுல சேர்ந்தோமோ அப்போமே, நம்ம சுதந்திரத்தையும், விட்டுட்டோம். அடுத்தவன் சுதந்திரத்தையும் அபகரிச்சுட்டோம். சரோசாவ... நீயே போய் கூட்டிக்கிட்டு வா."

   

சப்-இன்ஸ்பெக்டர், தனக்குப் பதவி உயர்வு வந்தது போல் துள்ளி எழுந்தார்.

   

சரோசாவை எப்படியாவது விட்டுவிட வேண்டும் என்று இந்த சப்-இன்ஸ்பெக்டரை கரும்பு மாமூல் கான்ஸ்டபிள் நச்சரித்துக் கொண்டிருக்கிறார். பதவி ரீதியில் இவர் அவருக்கு முதலாளி, ஆனால் மாமூல் விவகாரத்தில் அவர் இவருக்கு முதலாளி.

   

இன்ஸ்பெக்டர், சரோசா விவகாரத்தை விட்டு விட்டு, இன்னொரு விவகாரம் கொண்ட எப் ஐ ஆர் ஐ படிக்கத் துவங்கினார். சரோசாவை கிட்டத்தட்ட மறந்தே விட்டார். அப்போது:

   

"சார், இதோ சரோசா..."

   

"ஏய், ஒன் பேரு சரோஜாவா? சரோசாவா?"

   

"நீங்க கடைசியா சொன்ன சொல்லு வரமாட்டேங்குதே சாரே. போலீஸ் எங்களோட தோஸ்துன்னு பேரு. அப்படியும் என்னை இந்தப் பாடு படுத்திட்டாங்களே. கடவாப்பல்லு ஆடுது சாரே; கையி பிசகிட்டு சாரே.'

   

முகம் வீங்கி, கை வளைந்து, உடம்பை உண்மையிலேயே காயம் என்று சொல்லலாம் என்று சொல்வது போல் காயப்பட்டு நின்ற சரோசாவை, இன்ஸ்பெக்டர் பற்றற்ற முறையில் பார்த்தபோது, எங்கிருந்தோ ஓடிவந்த கரும்புக்கார போலீஸ்காரர் அவளுக்கு உபதேசம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.