Flexi Classics தொடர்கதை - வஸந்த கோகிலம் - 10 - வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்
இடம் : இராஜ வீதி.
இரண்டு பேர் மாதவராயரைக் கழுமரம் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகும் சமயம்.
ஜனங்கள் நெருங்குகிறார்கள்.
மாதவராயர் பாடிக் கொண்டு வருகிறார்.
நாதநாமக்கிரியை - திரிபுடை
ப. இதுவோ தலைவிதியோ? எனது காலகதியோ?
அ. பொதுளும் பொரு ளிழந்தும் உறுவோர் தலையிழந்தும்
துதியும் புகழிழந்தும் மதியாச் சிறுமைதன்னில்
பதியும் மனையும் சேயும் அகலக் கொலைஞனானேன்;
கதியே திணிக் கருணாநிதியே யெனது துணை (இது)
1 சண் : இதென்ன இம்பிட்டுக் கூட்டம் போங்கையா அப்பாலே. ஒங்கிளுக்கெல்லாம் இங்கிட்டு என்னய்யா சோலி?
2 சண் : பட்டிக்காட்டான் முட்டாயிக் கடையெப் பாக்கராப்புலே என்னையா இப்படிப் பார்க்கிறீங்க? என்னமோ பாவம் பெரிய வீட்டுப்புள்ளே தலைவிதியினாலே போறாரு. கூட்டங்கூட வாணாம் போங்கய்யா.
மாத : (ஒருபுறமாக மனிதனுடைய சத்ருவாகிய கர்ம வினையின் மாறுபாட்டை யார்தாம் அறிவர். எனக்கு இவ்விதமான கால வித்தியாசம் ஏற்படப் போகிறதென்று நான் ஒரு நாளும் நினைக்கவே இல்லை; வீதியின் வழியாகக் கட்டி இழுக்கப்படும் நிலைமைக்கு வருவேன்