என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் என்னைக் காணும் நகரத்தினர் யாவரும் கண்ணிர் விட்டு அழுகின்றனர். நரகத்தின் மத்தியில் ஒரு துளி தேன் வாயில் விழுந்ததைப் போல, இதைக் காண என் மனம் சற்று ஆறுதலடைகிறது. யாவரும் என்னைக் காப்பாற்றும்படி ஈசுவரனைப் பிரார்த்திக்கிறார்கள்.
1 சண் : அடியாத்தே! ஊர்ச்சனங்கள்ளாம் இப்படியா அளுவும் கண் கொண்டுதான் பார்க்க
முடியலியே!
2 சண் : அடே அந்தாலே பாருடா! ஊட்டு சன்னல்லே நிக்கிற பொட்டச்சிகள்ளாம் அளுவுறாங்கடா!
1 சண் : (தண்டோராப் போடுகிறான் துடும், துடும், துடும், துடும். ஊரு ஜனங்களுக்கு எல்லாம் தெரிவிப்பது என்னமெண்டால், நகராதிபதி ஊட்டு மாதவராயரு, தேவிடியா
வஸந்தஸேனையைக் கொன்னுப்புட்டு, அவளொட நவையெல்லாம் எடுத்துக்கிட்டாராம். அதுக்காவஅவரைநம்ம மவராசா கொன்னுட ஆக்கினைப் பண்ணிப் புட்டாங்க. இந்த மாதிரி பண்ணறவங்களுக்கு இப்படியே தலை போயிடும்.துடும், துடும், துடும், துடும்.
மாத : (காதில் கைகளை வைத்து மூடிக் கொண்டு) ஹா! ஈசுவரா!
விருத்தம் - முகாரி
ஈசனே! யேழை யிந்தத் தூஷணை பெறவோ வந்தேன்?
மாசிலா நெறியே நின்றேன், மரித்திடல் மதியே னிந்த
ஏசுறு மொழியைக் கேட்க எங்ஙனஞ் சகிப்பேன்றாழ்ந்த
நீசரா லிறக்குங் கால நேர்ந்ததோ? சதியே யாமோ?