"ஓ...ஹ்!" என்று ஒலியெழும்புகிறது. புன்னகை விரிகிறது.
"எனக்காகக் காத்திருக்கிறாயா யமு."
மெல்லிய குரலோடு அவள் அருகில் நெருங்குகிறான்.
அவள் ஒதுங்கிக் கொள்கிறாள்.
"ரொம்பக் கோபம் போலிருக்கு!"
நாற்காலியில் உட்கார்ந்து காலணிகளைக் கழற்றி எறிகிறான். அவற்றைப் பார்த்தால் நெடுந்தொலைவு நடந்து வந்திருக்கிறானென்று தோன்றுகிறது.
குளியலறைக்குள் அவன் சென்று கதவடைத்துக் கொள்கையில் அவளுள் ஓர் போராட்டம் நிகழ்கிறது.
கமலம்மா எழுந்து வருவாரா? அல்லது எழுப்பலாமா?
சுப்பையா உள்ளே போர்த்து மூடிக் கொண்டு உறங்குவானாக இருக்கும். அவனை எழுப்புமுன் கமலம்மா எழுந்து விடுவார்.
இது நல்ல சந்தர்ப்பம்.
மனம் விட்டுப் பேசலாமல்லவா?
ஆனால் அவனைப் பார்க்கும் போது தன்னுடைய ஆற்றல்களெல்லாம் ஒளிந்து கொள்ள, தேர்ந்தெடுத்த சொற்களெல்லாம் மறந்து போய்விடுமோ?
கெய்ஸரில் சுடுநீர் இருக்கும், அல்லது குளிர்ந்த நீரில் தான் இப்படித் தலையைத் துவட்டிக் கொண்டு வேற்றுடை மாற்றி வருகிறானோ? அவனாகவே சாப்பாட்டு அறைக்குள் சென்று