Kanavugal mattum enathe enathu - Tamil thodarkathai


Kanavugal mattum enathe enathu is a Family / Romance genre story penned by Bindu Vinod.

   

Kanavugal mattum enathe enathu is the second novel in 'Nands - SK' Series penned by Bindu Vinod. 

   

கதை சுருக்கம்:

நந்தினி - மிடில் கிளாஸ் பேமிலியை சேர்ந்தவள். அம்மா, தங்கை, தம்பி எனும் அன்பான குடும்ப வட்டத்தில் வாழ்பவள்.

   

எஸ்.கே (எனும்) சதீஷ் குமார் - பணக்காரன், வாழ்க்கையை அதன் பாட்டில் ஜாலியாக ரசிப்பவன்.

  

எஸ்.கேவும் நந்தினியும் சந்தித்தால் என்ன ஆகும்?

Opposite poles attract each other எனும் Laws of attraction உண்மை தானா???

   

  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 01 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “அம்மா, அமெரிக்கால படிக்கும் போதே வேலை செய்ய சில வாய்ப்பு இருக்கு. அப்படிக் கிடைச்சா, என்னைப் பத்தி நீங்க கவலையே பட வேண்டாம். இல்லைனாலும் படிச்சு முடிச்ச பிறகு வேலை வாங்கிக்க முடியும். அமெரிக்கால ஒரு இரண்டு மூணு வருஷம் இருந்தாலே போதும், கடன் பிரச்சனை எதுவுமில்லாமல் நல்ல அமவுன்ட் சேமிக்க

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 02 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “என்னைப் பார்த்தாலே உனக்குப் புரியனுமே, நான் ஒரு பாடி பில்டர். என் ஷோல்டர்ல கட்ஸ் கூட வச்சிருக்கேன்!”

    “நிஜமாகவா?”

    “இதென்ன பெரிய விஷயம் சிக்ஸ் பேக், எய்ட் பேக் எல்லாமே எனக்கு சாதாரணம். அப்புறம் அந்த அலையை என்னை டாமினேட் செய்ய விட்டுடுவேனா? என்னோட முழு சக்தியையும் பயன்படுத்தி

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 03 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “என்னைக் கேட்டால் அவனை ஃப்ரீயா விடு. அவனுக்கு இன்னும் முப்பது வயசு கூட ஆகலை. முப்பத்தி நாலு முப்பத்தி அஞ்சு ஆகும் போது, அவனுக்கே இந்த மாதிரி லைஃப்ஸ்டைல் வெறுத்து போயிடும். அவனே தானா மாறிடுவான். அவனுக்கே அவனுக்குன்னு ஒருத்தி வேணும்னு தோண ஆரம்பிக்கும்...”

    “ஆனால் அதுக்குள்ளே அவன் இன்னும்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 04 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    நாம நல்லதை நினைச்சு, நல்லதை செஞ்சா, நமக்கும் நல்லது தான் நடக்கும்

    மனதை தெளிவாக்கி கொண்டு நேரத்தைப் பார்த்தாள். மணி ஏழரை தாண்டி இருந்தது. அதற்கு மேல் தூங்க நினைப்பது வீண் வேலை

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 05 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “தெரியும் ஸ்வே! அதனால் தான் நான் இதைப் பத்தியெல்லாம் யோசிக்குறது இல்லை. என் ரேன்ஜ் எல்லாம் கொஞ்சம் அப்படித் தான்! கடவுள் என்னோட ரெக்வெஸ்ட் கேட்டு ஸ்பெஷல் ஆர்டர் ஏதாவது செஞ்சா தான் உண்டு” என்றாள் நந்தினி புன்னகையுடன்.

    “ஆசை பட்டா பரவாயில்லை, பேராசை பட்டுட்டு இதுக்கு இப்படி சாமி பேரெல்லாம்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 06 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “இதோ பாரு ஆஃபிஸ் பக்கம் வந்து நீ இப்படி பீகேவ் செய்றது நல்லா இல்லை. முதல்ல ஒரு நல்ல பொண்ணா பார்த்துக் கல்யாணம் செய்துக்கோ...” என்றாள்.

    “எனக்கு ஒரே ஒரே ஒரே ஒரு சந்தேகம் ஷான்!”

    “என்ன சந்தேகம்?”

    “நல்ல பொண்ணுன்னு எப்படிக் கண்டு பிடிக்கிறது? அதுக்கு ஏதாவது டெஸ்ட்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 07 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    "அதான் நான் இருக்கேன்ல, அப்புறம் எதுக்கு அழுற? ஐ வில் டேக் கேர் ஆஃப் யூ!”

    அந்தக் குரலில் இருந்த கனிவா, திடமா, கம்பீரமா இல்லை அவை அனைத்துடன் குழைந்திருந்த அன்பா..... ஏதோ ஒன்று நந்தினியை கட்டிப் போட்டது. தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவள், வழக்கத்திற்கு மாறாக குரல் வந்த திசையைப்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 08 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “அன்னைக்கு ஷெரீஃப் ஆஃபிஸ்ல எனக்கு ஹெல்ப் செய்த நந்தினி ஒரு பெரிய இக்கட்டான நிலமையில இருக்காங்க. நீ மட்டும் அவங்களைக் கல்யாணம் செய்துக்கிட்டா எல்லாம் சரி ஆகிடும். அவங்களுக்கு ஹெல்ப் செய்ற மாதிரி பேருக்கு செய்ற கல்யாணம் தான். என்ன சொல்ற, அவங்களைக் கல்யாணம் செய்துக்குறீயா?”

    கைப்பையை

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 09 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    சதீஷ் குமார்...! அவனைப் பற்றி என்ன தெரியும் அவளுக்கு? பெரிதாக எதுவுமே தெரியாது! எந்த தைரியத்தில் இந்த முடிவை எடுத்தாள் அவள்? சாந்தியிடம் திருமணத்திற்குச் சம்மதம் என்று சொன்ன வினாடியில் இருந்தே இந்தக் கேள்வி அவளைக் குடைந்து கொண்டே இருக்கிறது. அவளிடம் பதில் இல்லை! பதிலைத் தெரிந்து கொள்ள அவள்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 10 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “முதல்ல, இந்த சதீஷ்ன்னு கூப்பிடறதை நிறுத்து! அடுத்து, உனக்கு மாசா மாசம் ஊருக்கு அனுப்ப பணம் வேணும் அவ்வளவு தானே, நான் தரேன். எவ்வளவு வேணும்? மூவாயிரம் டாலர்? அஞ்சாயிரம் டாலர்? போதுமா?” எனக் கேட்டான்.

    நந்தினி வாயடைத்து நின்றிருந்தாள்! இவனை எந்த வகையில் சேர்ப்பது?

    “அஞ்சாயிரம்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 11 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    அவள் அதைப் பற்றி நினைக்கும் போதே, அதுவரை மேகத்திற்குப் பின் மறைந்திருந்த வெண்ணிலவு வெளியே வந்து பிரகாசித்தது. எஸ்.கே... ஹுஹும் மண்ணாங்கட்டி!!!! சதீஷுக்கு அவள் பெயர் நினைவு இல்லாமல் போனால் அவளின் வாழ்க்கை ஏன் இருண்டு போகிறது? இது தற்காலிகமான உறவு தானே! நந்தினி குழப்பங்களை அகற்றி யோசிக்கத்

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 12 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    “எஸ்.கே’வைப் போலவே நீயும் கொஞ்சம் வியர்ட் கேரக்டர் நந்தினி...” என்றாள்.

    “நானா?”

    “யெஸ்... எஸ்.கே உன் கிட்ட நடந்து கிட்ட விதத்துக்கும், அவனைப் பத்தி முழுசா தெரிஞ்ச பிறகும், நீ என்கிட்டே கோபப்படுவன்னு நினைச்சேன். பேசாமல் இருப்பன்னு கூட எதிர்பார்த்தேன்...”

    “உங்க

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 13 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    நந்தினி பேசத் தொடங்கும் முன்பே திரும்பி ஆர்டர் செய்யத் தொடங்கி இருந்தாள் அனாமிகா. நந்தினிக்கு அவளின் இந்த உரிமை கலந்த பேச்சும், நடவடிக்கையும் புது அனுபவமாக இருந்தது. ஆனால் பிடித்திருந்தது! அவளுடைய தம்பியும், தங்கையும் கூட இப்படி நந்தினியிடம் ஒட்டிக் கொண்டதில்லை. சிறிது நாட்களிலேயே அனாமிகா

    ...
  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 14 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    எல்லாமே சொல்லும் போதும், நினைக்கும் போதும் ரொம்பவும் எளிதாகத் தான் இருக்கின்றது. இந்தப் பொம்மை கல்யாணத்தைப் போல...! 

    சதீஷ் குமார்!

    இவனை என்ன செய்வது? எந்த விதத்தில் சேர்ப்பது? மிஸ்டர் எஸ்’ஸாம்! எஸ்.கே’வாம்! மண்ணாங்கட்டி எஸ்!

  • தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 15 - பிந்து வினோத்

    Kanavugal mattum enathe enathu

    ந்தினி கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தாள். மணி மதியம் பன்னிரெண்டரை ஆகி இருந்தது. இந்தியாவில் இரவு பத்து மணி. அதற்கு மேல் யோசிக்காமல் அம்மாவிற்கு உடனே போன் செய்தாள்.

    “நந்தினி எப்படிடா இருக்க?”

    சரஸ்வதியின் பாசம் பொங்கும் குரல்

    ...

Page 1 of 4

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.