Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
சிறுகதை - சேலை அணியும் ஜாதி பூ - சசிரேகா - 5.0 out of 5 based on 1 vote
Pin It

சிறுகதை - சேலை அணியும் ஜாதி பூ - சசிரேகா

smile

ட்டோ ஆட்டோ” என ரோடின் ஒரு ஓரத்தில் நின்றுக் கொண்டு ரகு வரும் போகும் ஆட்டோக்களை நிப்பாட்ட முயற்சி செய்தான். வந்த ஆட்டோக்கள் எல்லாமே ஆட்களுடன் சென்ற காரணத்தால் அவனுக்கு படப்படப்பாகிப் போனது. கையில் இருந்த வாட்சில் மணியைப் பார்த்தான். அப்போதே மணி 8.30 என காட்டவே அவனுக்கு இன்னும் பயம் வந்தது. வேர்த்து கொட்டியது

”9.30 மணிக்கு எக்ஸாம் இருக்கு, இன்னிக்கு பார்த்தா பைக் பஞ்சர் ஆகனும் நேரத்துக்கு போகலன்னா பிரின்சிபால் திட்டுவாரு. படிச்சவனுக்கு இங்க மதிப்பு கிடையாது வான்னா வரனும், போன்னா போகனும் சொந்தமா யோசிக்க கூட விடாமாட்டாங்க இப்ப மட்டும் லேட் ஆச்சி பசங்களுக்கு டிசி கொடுக்கற மாதிரி எனக்கு ஒரு டிசி கொடுத்து விரட்டுவாரே, இந்த வாத்தியார் தொழிலே கஷ்டமா இருக்கு, நேரம் வேற ஆகுது ஒரு ஆட்டோவும் கிடைக்கலை, நடந்தும் என்னால போக முடியாதே இந்த முறை ஆட்டோவை விட்டா அவ்ளோதான்” என நினைத்தவன் தன்னிடமிருந்த கர்சீப்பால் முகத்தை துடைத்துக் கொண்டு அந்த பக்கம் இந்த பக்கம் என பார்த்தான்.

அங்கு ஒரு ஆட்டோ வரவே சந்தோஷப்பட்டு கைகாட்டி ஆட்டோ என அழைக்க அதுவும் அவன் பக்கம் வந்தது நின்றது சிறிதும் தாமதிக்காமல் அதில் ஏறியவன் என்ன ஏது என பாராமலே டிரைவரிடம் தான் பணிபுரியும் காலேஜ் பெயரைச் சொல்லி

”அண்ணா சீக்கிரமா போங்கண்ணா” என சொல்லிவிட்டு சீட்டில் சாய்ந்துக் கொண்டு நிம்மதி பெருமூச்சு வாங்கினான்.

அந்த நேரம் அவனுக்கு சுவாசக்காற்றில் வேறு ஏதோ நறுமணம் வருவதைக்கண்டு வியந்து என்ன ஏது என உள்ளே பார்க்க ஆட்டோவை ஒரு பெண்மணி ஓட்டிக் கொண்டிருந்தாள். அவளது தலையில் இருந்து வந்த ஜாதிமல்லியின் வாசம் அந்த ஆட்டோ முழுக்க பரவியது. எப்படியோ ஆட்டோ கிடைத்துவிட்டது இனி நேரத்திற்கு காலேஜ் சென்றுவிடலாம் என நிம்மதியடைந்தவன் ஜாதி மல்லிப் பூவின் வாசத்தை அருகில் சென்று ரசித்து மோப்பம் பிடித்து அனுபவித்தவன்

”ஆஹா” என்றான் வாய்விட்டு. ஆட்டோ டிரைவரோ முன்னால் இருந்த கண்ணாடி வழியாகவே பின்னால் இருந்தவனைப் பார்த்துச் சிரித்தவள்

”என்ன சார் பூவாசம் பிடிச்சிருக்குங்களா” என அவள் பேசவே அதிர்ந்தான் ரகு, உடனே விலகி சீட்டில் அமர்ந்தவன்

”சாரி சாரி அது வந்து நான்” என உளற அவளோ

”இருக்கட்டும் ரசிக்கறது தப்பில்லையே எனக்கு ஒண்ணும் பிரச்சனையில்லை” என சொல்லியவளை பக்கவாட்டில் பார்த்தான் ரகு. சேலை அணிந்திருந்தாள், மேலே காக்கி சட்டை யூனிபார்ம் அணிந்திருந்தாள், முகத்திற்கு கர்சீப் போட்டு முகத்தை மூடிக் கொண்டு கண்கள் மட்டும் திறந்திருக்கவே

Pencilஹாய் பிரெண்ட், கதையை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

”என்ன கர்சீப்பால முகத்தை மூடியிருக்கீங்க” என ரகு கேட்க

“எனக்கு பூக்கள்னா அலர்ஜி அதான்”

“அப்புறம் ஏன் பூவை தலையில வைச்சிருக்கீங்க”

“என் அப்பாவுக்காக வைச்சிருக்கேன், அவரோட  ஆசை இது, ரொம்ப டென்ஷனா இருக்கீங்களே ஏதாவது பிரச்சனையா

“ஓ அது எனக்கு அவசரமா எக்ஸாம் இருக்கு அதான்”

“புரியுதுங்க”  என சொல்லி அவளும் வேகத்தை கூட்டினாள்.

”பொதுவா உங்களை போல பெண் டிரைவர்கள் பெண்களைத்தானே ஆட்டோவில ஏத்துவாங்க, இந்த லேடீஸ் பஸ் போல லேடிஸ் ஆட்டோ டைப் ஆனா நீங்க என்னை ஏத்திக்கிட்டீங்களே”

“நான் பாரபட்சம் பார்க்கறதில்லைங்க” என சொல்லும் போதே கல்லூரி வர அவனை  கல்லூரி கேட் முன்பு இறக்கிவிட்டாள். அவனும் உடனே பணத்தை தந்துவிட்டு அவசரமாக வாட்சில் மணியைப் பார்க்க அது 8.45 என காட்டவே அவசரமாக உள்ளே நுழைந்தான்.

அந்த ஆட்டோவும் திரும்பி அங்கு ஒரு பக்கமாக சென்று நின்றுவிட்டது.

சரியாக 9.20க்கு ஒரு வகுப்பிற்குள் வினாத்தாள்களுடன் நுழைந்தான் ரகு. அந்த அறையில் அனைவரும் இருக்கவே முதலில் வெற்றுவிடைத்தாள் பேப்பரை ஒவ்வொருவருக்கும் கொடுக்கலானாள். ஒரு பெண்ணிடம் வரும் போது அதிகமாக ஜாதி மல்லி வாசம் வருவதைக்கண்டு வியந்து அவளையே பார்த்தான்.

அதே  சேலை, அதே தலை, அதே ஜாதிப்பூ, என்ன கர்ச்சீப் இல்லாமல் முகத்தை காட்டிய வண்ணம் ரகு வியப்பாக பார்ப்பதைக் கண்டு புன்சிரிப்பு சிரிக்க அவனுக்கு குழப்பமே வந்தது. அமைதியாக அவளுக்கு விடைத்தாளை கொடுத்துவிட்டு தன் இருக்கை இருந்த இடத்தில் டேபிள் மீதிருந்த வினாத்தாள்களைப் பார்த்தான். மணியைப் பார்த்தான். பெல் அடிப்பதற்கு முன் வினாத்தாளையும் அனைவருக்கும் அவசரமாக கொடுத்துவிட்டு தன் இருக்கைக்கு சென்று அமர்ந்தான். அனைவரும் வினாத்தாள்களை பார்த்து கொண்டிருக்கும் போதே பெல் அடிக்கவும் அவன் சத்தமாக

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5  6  7 
 •  Next 
 •  End 

About the Author

Sasirekha

Sasirekha

Sasirekha's Popular stories in Chillzee KiMo

 • Edhetho ennam valarthenEdhetho ennam valarthen
 • Enaiyaalum kadhal desam nee thaanEnaiyaalum kadhal desam nee thaan
 • En mel undranukkethanai anbadiEn mel undranukkethanai anbadi
 • Ilaiya manathu inaiyum pozhuthuIlaiya manathu inaiyum pozhuthu
 • Ullathal unnai nerungugirenUllathal unnai nerungugiren
 • Maasilla unmai kadhaleMaasilla unmai kadhale
 • Unnai kaanaathu urugum nodi neramUnnai kaanaathu urugum nodi neram
 • Vannam konda vennilave vaanam vittu vaaraayoVannam konda vennilave vaanam vittu vaaraayo

Completed Stories
On-going Stories

Add comment

Comments  
# RE: சிறுகதை - சேலை அணியும் ஜாதி பூ - சசிரேகாsasi 2018-09-26 12:04
Quoting madhumathi9:
:clap: nice story.niraiya per munnaadi oru maathiriyum pinnaadi veru maathiriyum pesuvaargal. :th :GL: nkx:

மது உங்க கமெண்ட் எனக்கு புரியலைப்பா என்னைப் பத்தி சொல்றீங்களா இல்லை கதையில வர்ற ஹீரோயின் பற்றி சொல்றீங்களா கொஞ்சம் விளக்கம் தேவை ப்ளீஸ் :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சேலை அணியும் ஜாதி பூ - சசிரேகாmadhumathi9 2018-09-26 16:01
Oh my god.kathai patrithaanpa sonnen. Ungalai solvathaayitunthaal sasi endru azhaithiruppeney.ragu virumbiya mudhal ponnu raguvai patri pinnal pesiyathai vaithu appadi sonnen.pothuvaaga sonnathai ippadi purinthu kondeergale.ungalaipoi naan ean appadi sollapogiren.don't worry.
Reply | Reply with quote | Quote
# RE: சிறுகதை - சேலை அணியும் ஜாதி பூ - சசிரேகாsasi 2018-09-27 20:45
Quoting madhumathi9:
Oh my god.kathai patrithaanpa sonnen. Ungalai solvathaayitunthaal sasi endru azhaithiruppeney.ragu virumbiya mudhal ponnu raguvai patri pinnal pesiyathai vaithu appadi sonnen.pothuvaaga sonnathai ippadi purinthu kondeergale.ungalaipoi naan ean appadi sollapogiren.don't worry.

ok cool friend i am happy
Reply | Reply with quote | Quote
# சேலை அணியும்.....வைத்தியநாதன் 2018-09-26 10:10
Sasirekha madam ஒரு பிறவி கதாசிரியர்! தொழில் ஆசிரியரோ? என ஒரு சமயமும், ஆட்டோ ஓட்டுனரோ என மற்றொரு சமயமும், சமூக சேவகரோ என பிறிதொரு சமயமும் மாறி மாறி நினைக்கத் தோன்றுகிறது, கதை படைக்கப்பட்ட கைவண்ணம்! ஒருபுறம் கிளுகிளுப்பு தூண்டினாலும், மறுபுறம் சமூகநல ஈடுபாட்டை உற்சாகப்படுத்துகிற உயர்ந்த உள்ளம், படிப்பவரின் மனதை கவருகிறது. மனமார்ந்த பாராட்டுகள்!
Reply | Reply with quote | Quote
# RE: சேலை அணியும்.....sasi 2018-09-26 12:04
Quoting வைத்தியநாதன்:
Sasirekha madam ஒரு பிறவி கதாசிரியர்! தொழில் ஆசிரியரோ? என ஒரு சமயமும், ஆட்டோ ஓட்டுனரோ என மற்றொரு சமயமும், சமூக சேவகரோ என பிறிதொரு சமயமும் மாறி மாறி நினைக்கத் தோன்றுகிறது, கதை படைக்கப்பட்ட கைவண்ணம்! ஒருபுறம் கிளுகிளுப்பு தூண்டினாலும், மறுபுறம் சமூகநல ஈடுபாட்டை உற்சாகப்படுத்துகிற உயர்ந்த உள்ளம், படிப்பவரின் மனதை கவருகிறது. மனமார்ந்த பாராட்டுகள்!

மிக்க நன்றி :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: சிறுகதை - சேலை அணியும் ஜாதி பூ - சசிரேகாmadhumathi9 2018-09-26 06:37
:clap: nice story.niraiya per munnaadi oru maathiriyum pinnaadi veru maathiriyum pesuvaargal. :th :GL: nkx:
Reply | Reply with quote | Quote

Coming Soon...

Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)

Come join the FUN!

Write @ Chillzee
Go to top