(Reading time: 41 - 82 minutes)

நின்றதாக சொல்லிவிட்டுபோனார்... என்னடி இதெல்லாம்... ஒரு வார்த்தை என்னிடமாவது சொல்லவில்லையே... என அவளது தாய் ஆதங்கப்பட ..

விடு மம்மி ..!அது அப்போவே முடிந்து போயிற்று..சும்மா எதுக்கு உன்னை டென்ஷன் பண்ணணும்னு தான் சொல்லவில்லை.. டைம் ஆகுது நீ போ.. என தாயை அனுப்பி விட்டு சற்று நேரத்தில் எழந்து ரெப்ரஸ் ஆகிவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தாள்.. அதுவும் சற்று நேரத்தில் போர் அடிக்கவே... எங்கே இந்த வினி இவ்வளவு நேரமாகுது .. இந்த பக்கம் ஆளையே காணவில்லை என்று எண்ணிக்கொண்டு இருக்க அப்போது தான் அவளது தாய் கூறியது நினைவிற்கு எட்ட அந்த பையை எடுத்துக் கொண்டு வினி வீட்டிற்குச் சென்றாள்..

என்ன வீடு திறந்திருக்கு.. ஆண்ட்டி எங்கே..? என்று எண்ணியபடி ஆண்ட்டி ..! ஆண்ட்டி...! என அழைத்துக்கொண்டே உள்ளே சென்றாள்.. அம்மாவும் வினியும் கடைக்கு போய் இருக்காங்க என்ற படி அவனது அறையிலிருந்து வெளியே வந்தான் விஷ்வா.. விஷ்வாவினை பாரதி அப்போது கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை.. அவனைக் கண்டதும் பாரதி போகலாம் என எண்ணி திரும்புகையில்..

என்ன மேடம் பல வருஷமாக தங்களின் தரிசனம் அடியேனுக்கு கிட்டவே இல்லை.. தலைமறைவா.. என கிண்டலடித்த படி அம்மா இப்போ வந்துடுவாங்க இரு.. என்ன சாப்பிட்ற டீ .. காபி என விஷ்வா கேட்கவும் அவசரமாக நான் இப்போ தான் சாப்பிட்டேன்.. எதுவும் வேண்டாம்.. நான் அப்புறம் வாரேன் என்றபடி வீட்டுக்கு போகமுற்பட்டாள் பாரதி..

ஹேய் பாரதி கூல்.. எவ்வளவு மாதத்துக்கு அப்புறம் மீட் பண்ணியிருக்கோம் .. இரு ..டென்த் பப்ளிக் ரொம்ம நல்லா மார்க்ஸ் ஸ்கோர் பண்ணிருந்தனு தெரிந்ததும் ரொம்ப ஹாப்பி.. விஸ் பண்ணலாம்னு பார்த்தால் நீ ரொம்ப பிஸி.. இப்போ பார்த்தால் ப்பிளஸ் வன்னே ஹாப் முடியப்போகுது..அப்புறம் லைப் எப்படி போகுது..என விஷ்வா கேட்க.. நீ இல்லாமல் இது வரை நல்லா தான் போனது என்று எண்ணியபடி இட்ஸ் கொயிங் குட்.. உனக்கு என்று பதில் கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டாள்..

படிப்பெல்லாம் ரொம்ப நல்லா தான் போகுது.. என் லவ்வரை மிஸ் பண்றது ஒன்றைத் தவிர எல்லாம் பக்கா.. என்றபடி பாரதியை ஆராய அவள் முகத்தில் எரிச்சல் மண்டியிட நான் போறேன் என்றபடி வீட்டிற்கு போகலாம் என துரிதமாய் போக முற்படுகையில் அவளது கையை இறுக பற்றி நிறுத்தி எப்படிடீ உன்னால் மட்டும் முடியுது.. உன்மேல பைத்தியமாக இருக்க ஒருதரை தூக்கியெறிந்து ஒரு துளி கூட என் நியாபகம் இல்லாமல் கேஸுவலாக இருக்க.. என ஆதங்கமாய் கேட்க..

விஷ்வா கையை விடு உனக்கு முன்னமே சொல்லிருக்கேன்.. இப்படி சைக்கோ மாதிரி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.