(Reading time: 41 - 82 minutes)

தனது வீட்டில் இந்த கல்யாணப்பேச்சு ஒத்துவராது என்று கூறியதனால் தான் விஷ்வா இப்படி பேசுகிறான் என எண்ணியபடி..

இத்தனை வருடங்கள் இல்லாமல் சாருக்கு திடீரென்று எந்த போதிமரம் கொடுத்த ஞானோதயமோ...இது என நக்கலாக கேட்டாள்..

நீ என்னை நம்பவில்லை என்றாலும் இத்தனை வருடங்களில் எத்தனையோ தடவை நினைத்து வருதப்பட்டிருக்கிறேன்.. இதை மாற்ற முடியாதா..?னு.. என் தவறை உணரவைத்தது வினி.

. " அண்ணா..! ச்சீ அப்படி சொல்லவே வெட்கமாக இருக்கு..நானும் பாரதியும் ஒன்னு போல தானே.. நீ நடந்துகிறது போல எனக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்.. பொண்ணுங்க எல்லாரும் வலி ஒன்னு தானேடா..உன்னை நல்ல நண்பனாய் இத்தனை காலம் நினைத்ததிற்கு நல்ல உபகாரம் செஞ்சிட்ட பாரதிக்கு..உன்னோட பேசுறதே பாவம் என்று என்னோடு பேசாமலே விட்டுட்டாள்..

அதுவும் இல்லாமல் நான் வீட்டில் இருக்கும் போது ஏகபட்ட எச்சரிக்கை உணர்வோடும்..என்னை கண்டால் விட்டு விலகி போகும் போது தான் என் தவறை முழுமையாய் உணர்ந்தேன்.. அண்ணண் என்ற உறவில் தனக்கான பாதுகாப்பை உணராமல் பயத்தை உணர்ந்தது எத்தனை பெரிய வலி..

என் பாவத்திற்கு பிராயச்சித்தம் என்னவென்று தெரியவில்லை..இப்போது உன்னை வற்புறுத்தவுமில்லை..எத்தனைஆண்டுகள் வேண்டுமானாலும் உனக்காக வெய்ட் பண்றேன்.. என் மேல் நம்பிக்கை வரும் நொடி வரை .. என விஷ்வா கூறும் போது அவன் குரல் தணிந்தது.. அவன் செயலுக்காய் நிஜமாய் வருந்துகிறான் என்பதும் புரிந்தது..

விஷ்வா நீ மாறி இருக்கலாம்.. எத்தனை ஆண்டுகள் இல்லை உன் ஆயுள் பூராகவும் காத்திருந்தாலும் என் முடிவு இது தான்.. நீ சிதைத்தது என் மனசை மட்டுமில்லை உன் மேல எனக்கு இருந்த நம்பிக்கையை.. இன் எ ரிலேஷன்ஷிப் ட்டிரஸ் இஸ் மோர் இம்போர்டன் தென் லவ்... இல்லையா..? உன்மேல நம்பிக்கை துளியும் வராமல் என்னால் போலித்தனமான வாழ்க்கை வாழ முடியாது.. நம்பிக்கை என்பது கண்ணாடி போல .. உடைத்தால் ஒட்ட வைக்க முடியாது.. வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்தோமானால் அது எப்போது வேண்டுமானாலும் காயப்படுத்தும்.. அதில் தெரியும் விம்பம் கூட விகாரமாக தான் இருக்கும்..இரண்டும் ஆபத்து தான்.. சோ என்னை என் வழியிலேயே விட்டுவிடு .. நான் சேரும் இடம் நிச்சயமாய் நீ இல்லை .. புரியும்னு நினைக்கிறேன்.. என்றபடி பாரதி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.