(Reading time: 12 - 23 minutes)
Couple

உடனே போய், உங்க நண்பர்கிட்ட உண்மையை சொல்லி, பணத்தை கேட்டால், அவர் உடனே திருப்பிக் கொடுத்துடுவார், சரியா?"

 சோமு திடுக்கிட்டு எழுந்து மகனை தடுத்தார்.

 " தியாகு! நான் உன்னை இப்ப தடுக்கலேன்னா, வீராவின் மகள் கல்யாணம் நின்றுபோய்விடும். அவள் எதிர்கால வாழ்வே இருண்டு போய்விடும். அது மகாபாபம்!"

 " சரி, நான் அவரிடம் போய் பணத்தை வாங்கிவரலேன்னா, நாளைக்கு டாக்டரிடம் போயாகணுமே, பணத்துக்கு என்ன செய்வது?"

 " நாற்பது வருஷமா ரிஜிஸ்டிரார் ஆபீஸிலே வேலை செய்துட்டு, கையிலே சம்பளத்தை தவிர ஒரு பைசா பார்க்காத இந்த அசடுமாதிரி, உலகத்திலே வேற யாருமே இருக்கமாட்டாங்க, தொலையறது அது கெட்டவழின்னு பேசாமல் இருந்தா, இப்படி பிடிப்புப் பணம் மொத்தமா வந்ததை யாராவது கடனா கொடுப்பாங்களா? ரவி! கேள்டா, அப்பாவை!"

 " அப்பா! இடித்த புளியைப் போல, வாயை திறக்காம உட்கார்ந்திருந்தால், என்னப்பா அர்த்தம்? பேசுப்பா!"

 சோமு தலை நிமிர்ந்து அனைவரையும் தீர்க்கமாகப் பார்த்தார்.

 " என்னை நம்பி ஒருத்தன் நியாயமான காரணத்தைச் சொல்லி கடன் கேட்கிறபோது, கையிலே பணத்தை வைச்சுக்கிட்டு எப்படிடா கொடுக்காமல் இருக்கமுடியும்?"

 " நண்பரிடம் நீ எதுக்காக அந்தப் பணத்தை வைச்சிருக்கேன்னு சொல்லியிருந்தால், அவரே பணத்தை வாங்கிக் கொண்டிருக்க மாட்டாரேப்பா, ஏன் சொல்லலை?"

 " எனக்கென்னவோ, நியாயமான காரணத்துக்கு, ஒரு பெண்ணின் திருமணம் தடைபடாமல் நடக்கிறதற்கு, உதவணும்னு தோணித்து. ஆண்டவன் என் கையில் பணத்தை வைத்திருந்ததே, அந்த நல்ல காரியத்திற்காகத் தானோன்னு தோன்றியது. இந்த உதவியினாலே கிடைக்கிற புண்ணியத்தினாலே, என் வயிற்றுவலி கொஞ்சநாட்களுக்கு என்னை பாதிக்காதுன்னு நம்புகிறேன்............."

 " அப்பா! நீயென்ன பெரிய சங்கராச்சாரியாரா? ரமண மகரிஷியா? உடல்நோய் உன்னை பாதிக்காமல் இருக்கிறதுக்கு? நீ செய்தது, சுத்த வடிகட்டின பைத்தியக்காரத்தனம்!"

 " ரவி! நீ என்ன சொன்னாலும், அவருக்கு உறைக்காதுடா! இவரை கட்டிக்கிட்டு, முப்பது வருஷமா காலம் தள்ள நான் எத்தனை கஷ்டப்பட்டிருப்பேன்னு நினைச்சுப்பாருங்க! பெருமாளே! என்னை நீதான் காப்பாற்றணும்!"

 கூடியிருந்தோர் கலைந்தபிறகு, சோமு பூஜையறைக்குச் சென்று கையெடுத்து கும்பிட்டார்.

 " இறைவா! உன் கருணையே கருணை! சரியான நேரத்தில் எனக்கு திடமான மனதை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.