(Reading time: 12 - 23 minutes)
Couple

 " சோமு சார்! நீங்க தொடர்ந்து அலோபதி சிகிச்சை செய்து கொள்ளுங்கள்! கூடவே நான் தருகிற மாத்திரைகளையும் தவறாமல் சாப்பிடுங்க! போகப் போக பார்ப்போம்! அலோபதி முறைக்கும் ஹோமியோபதி முறைக்கும் இடையே நடக்கிற சவாலாகவே நான் இதை பார்க்கிறேன். நீங்கள் எனக்கு இப்போது பணம் எதுவும் தரவேண்டாம். சோமு சார்! உங்களுக்கு எப்போது வலி குறைவாகவோ, முற்றிலும் போய்விட்டதாகவோ உணர்ந்தால், அப்போது சந்தோஷமாக பணம் கொடுங்கள். வாங்கிக்கொள்கிறேன். உங்கள்மூலமாக, ஹோமியோபதி முறையின் சிறப்பு மக்களை சென்றடையட்டும், அதுதான்முக்கியம்!"

 ஒருபுறம் டாக்டர் ரங்கநாதனின் அலோபதி டெஸ்ட்டுகளும், ஊசியும், மருந்தும் தொடர, மறுபுறம், கோபிகாரின் ஹோமியோபதி மருந்துகளை தினமும் தியாகு வாங்கிவந்து தருவதும், அதை நம்பிக்கையின்றி சோமு உட்கொள்வதும் நடந்துவந்தது!

 பதினைந்து நாட்கள் கடந்ததும், ஒருநாள் டாக்டர் ரங்கநாதன் தியாகுவை அழைத்துப் பேசினார்.

 " தியாகு! உன் அப்பாவின் வியாதி திடீர்னு மோசமாகிவிடும் தன்மை கொண்டது. இப்போது உன் அப்பா நார்மலாக இருப்பதுபோல் தோன்றுவதைப் பார்த்து ஏமாந்துவிடாதே! எந்த நிமிஷமும் எதுவும் நடக்கலாம், உயில் எழுதவேண்டியிருந்தால் அதை உடனடியாகச் செய்!" என்றார்.

 " டாக்டர்! நாங்கள் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பம். எங்களுக்கு பெரியதாக சொத்தெல்லாம் கிடையாது, எங்கப்பா உயிரோடிருந்தால் போதும்!"

என்றான்.

 ஒரு மாதம் கழிந்ததும், டாக்டர் ரங்கநாதன் சோமுவுக்கு பேரியம் மீல் டெஸ்ட் எடுத்து வியாதி எந்த அளவுக்கு முற்றியுள்ளது என்று பார்த்தார்.

 ரிபோர்ட்டை பார்த்துவிட்டு ஏதோ தீவிரமாக யோசித்தார்.

 " தியாகு! சோமு என்ன சொல்கிறார்? வலி குறைந்திருக்கிறதா? அப்படியேதான் இருக்கா? அதிகமாயிருக்கா?"

 " டாக்டர்! அப்பா எப்போதுமே அதிகமா பேசமாட்டார். அவர் முகத்தைப் பார்த்து நாங்கள்தான் தெரிந்துகொள்வோம், ஆனா சில நாட்களாக இரவிலே நல்லா தூங்கறாரு........."

 " தியாகு! தெய்வம் உங்க அப்பாவுக்கு தன் அருளை தந்து கட்டியை கரைத்து வருகிறார், டெஸ்ட் ரிபோர்ட்டிலே தெரியுது! தியாகு! உண்மையை சொல்லிடறேன், உங்கப்பாவுக்கு நான் தருகிற மருந்து மாத்திரையெல்லாம் அவருக்கு வயிற்றுவலி தெரியாமல் இருக்கத்தான்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.