(Reading time: 18 - 35 minutes)

சிறுகதை - முகத்திரை கிழிகிறது! - ரவை

கரத்தின் முக்கியப் பகுதியில், இரண்டு கிரவுண்டு பரப்பளவில், கட்டப்பட்டு இரண்டு வருடமே கழிந்த, அந்த மூன்றடுக்கு பங்களா, அவ்வளவு குறைந்த விலைக்கு விற்கப்படுகிறதே என ஊரில் மக்களிடையே பெரும் பரபரப்பு!

 விற்பவரிடம் நேரிடையாக கேட்டுவிடலாம் என விசாரித்ததில், அவர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டாராம்!

 அக்கம்பக்கத்தில் விசாரித்தபோதுதான் உண்மையான காரணம் தெரிந்தது!

 அந்தப் பணக்காரக் குடும்பத்தில் பிறந்த ஒரே வாரிசு, வயதுவந்த கன்னிப்பெண், அந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துவிட்டதால், இறந்த கன்னிப்பெண், பேயாக அந்த வீட்டில் உலவுவதாகவும் இரவில் அவள் கிரீச் என அலறுவது உரக்க கேட்பதாகவும் வதந்தி பரவி, அந்த வீட்டை கோடிக்கணக்கான ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கி, குடியேற மக்கள் தயங்குவதால், கிடைத்தவரையில் ஆதாயம் என விற்பவர் விலையை மிகவும் குறைத்துள்ளதாக தகவல்!

 வீட்டு புரோக்கர் சதானந்தம் இதை அறிந்ததும், ஆனந்தத்தின் எவரெஸ்டில் குதித்தார்.

 இந்த வீட்டை விற்றுக் கொடுத்தால், விற்பவர், வாங்குபவர் இருவரும் தனக்கு தாராளமாக வழங்கப்போகும் கமிஷன் பெருந்தொகையிலே தனக்கு ஒரு வீடு வாங்கிக்கொண்டுவிடலாம் என திட்டம் போட்டு தீவிரமாகச் செயற்பட்டார்.

 முதலில், அந்த பங்களாவின் சொந்தக்காரனைப் பற்றிய முழு விவரங்களை சேகரிக்கும் முயற்சியில் இறங்கினார்.

 அந்த பங்களாவை நேரில் பார்த்ததும், அசந்து நின்றுவிட்டார். கிளி கொஞ்சும் அழகு என்பார்களே, அப்படியொரு அழகு! கட்டியணைத்து முத்தமிட வேண்டும் போலிருந்தது!

 கேட்டிலிருந்து இருபது அடி தள்ளி பங்களா அமைந்திருந்தது. அந்த வெற்றிடத்தில் இருபுறங்களிலும், பூச்செடிகள் மணம் பரப்பின!

 பேஸ்மெண்டில் கார் பார்க்கிங் இடத்தில், தாராளமாக நான்கு கார்கள் நிறுத்தலாம். பங்களாவுக்குள் நுழைந்ததும் வராந்தாவில் நான்கு இருக்கையும் பத்திரிகை, புத்தகம் வைக்கும் மேசையும் அழகாக இருந்தன.

 இப்படி மூன்றடுக்கும் விசாலமாகவும் கச்சிதமாகவும் புதிதாகவும் கவர்ச்சியாகவும் இருந்தன!

 ஏறக்குறைய லிவிங் ஸ்பேஸே இரண்டாயிரம் சதுர அடி இருக்கும்! மொத்த ஏரியா இரண்டு கிரவுண்டில், கட்டிடத்தின் பின்புறம் தண்ணீர் வசதிக்காக கிணறு, பம்ப்செட், தவிர, மின்வசதி தடைப்பட்டால் உதவ ஜெனரேடர், செக்யூரிடி வாட்ச்மென் தங்குமிடம், எல்லாம் இருந்தன.

 புரோக்கர் சதானந்தம் வீடு வாங்கும், விற்கும் துறையில் இருபதாண்டு அனுபவம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.