(Reading time: 18 - 35 minutes)

ஐடியா?"

 " அருமையான ஐடியாங்க! சரி, நாளைக்கே கிராமத்துக்குப் போய் வீடு, நிலத்தை விற்கிற வேலையை பார்ப்போம், சரியா?"

 இப்போது கேமராவை, வெளிநாட்டிலே வாழ்கிற பங்களா ஓனர் மாத்ருபூதம் வசிக்கிற வீட்டுக்கு திருப்புவோமா?

 " டார்லிங்! நம்ம பங்களா ஏஜெண்ட்டுக்கு உடனே போன் போட்டு பேசுங்க! எருமை மாட்டு மேலே மழை பெய்தாமாதிரி, அந்த ஏஜெண்ட் கம்முனு ஆயிரக்கணக்கிலே மாதம் சம்பளம் வாங்கிகிட்டு வீட்டை விற்க எதுவும் செய்யாம உட்கார்ந்திருக்கான்....."

 " லட்சுமி! நேற்றுகூட அவனோட பேசினேன். அவன் சொல்றான், பங்களாவிலே நைட்லே நடமாட்ட சத்தம் கேட்குதாம், க்ரீச்னு கத்தி அழுகிற சத்தமும் கேட்குதாம். பக்கத்து பங்களாக்காரன் அப்படி ஊர் முழுவதும் சொல்லி வாங்க வரவங்களை விரட்டிடறானாம்......."

 " நிசமா இருக்குமா, இல்லே புரளியா?"

 " வெளிநாட்டிலே இருக்கிற நாம எப்படி உறுதியா சொல்லமுடியும்? தற்கொலை பண்ணிண்ட நம்ம பொண்ணு ராணி ஒருவேளை ஆவியா அங்கே உலவுகிறாளோ என்னவோ, அல்லது, நமக்கு நல்ல விலை கிடைக்கக்கூடாதுன்னு பக்கத்து பங்களாக்காரன் செய்கிற சூழ்ச்சியாகவும் இருக்கலாம்.....என்ன செய்யலாம், சொல்லு, டார்லிங்!"

 " நீங்க வேலை பார்க்கிற பேங்குக்கே கெஸ்ட் ஹவுஸ் தேவைப்படுமே, பெரிய அதிகாரிங்களுக்கு குவார்ட்டர்ஸ் வேண்டியிருக்குமே, விசாரிங்க!"

 " ஒன்டர்புல் ஐடியா! இந்த விஷயத்தை உடனடியா இந்தியாவுக்கு நானே போய், பேங்க் மேலதிகாரிகளை பார்த்து, டீலை முடித்துக் கொண்டு வரேன்,....."

 " இப்பவே நான் ஃபிளைட் டிக்கட் புக் பண்ணிடறேன், கிளம்புகிற வேலையை பாருங்க, பங்களா பத்திரங்களை, ஒரிஜினலை மறக்காம எடுத்துக்குங்க, அப்புறம்! விலைக்கு வாங்கிக்கா விட்டாலும், அஞ்சு வருஷ லீஸுக்கு கொடுத்துடுங்க!"

 கேமிரா மீண்டும் புரோக்கர் வீட்டுக்கு திரும்புகிறது.

 " மாமா! வேகவேகமா கிராமத்துக்கு கிளம்புகிறோமே, வீடு நிலத்தை விற்று பணம் புரட்ட! பங்களா ஓனரிடம் பேசவே இல்லையே, கடைசி நேரத்திலே பங்களா ஏற்கெனவே விலை பேசி முடிவாகியிருந்தால், நம்ம திட்டம் என்ன ஆகிறது?"

 " காசி! நல்லவேளை, நீ புத்திசாலித்தனமா ஞாபகப்படுத்தலேன்னா, நம்ம கதி அதோகதியாகி இருக்கும், இப்பவே போய் அவர் போன் நம்பர் கேட்டு வாங்கி பேசிட்டு வரேன்....."

 சதானந்தம் ஏஜெண்ட் ஏகாம்பரத்தை தேடிப்பிடித்து பங்களா ஓனரின் போன் நம்பரை

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.