(Reading time: 18 - 35 minutes)

கேட்டபோது, ஏகாம்பரத்தின் கைபேசி சிணுங்கியது!

 " கொஞ்சம் இரு, புரோக்கர்! லைனிலே யார்னு கேட்டுட்டு வரேன்...."

 ஹலோ ஏகாம்பரம் ஹியர்! யார் பேசறது?

 நான்தான் வெளிநாட்டிலிருந்து மாத்ருபூதம் பேசறேன், நாளை மறுநாள் நான் அங்கு வரேன், பங்களா சாவியை எடுத்துக்கொண்டு பங்களாவிலே காத்திரு, மத்தியானம் ரெண்டு மணிக்கு வந்துடறேன், சரியா?"

 " சரிங்க, என்ன திடீர்னு வரீங்க? இன்னும் பார்ட்டி யாரும் கிடைக்கலியே......."

 " உன்னை நம்பினா என் கதி அதோகதிதான்! நானே பார்த்துக்கிறேன், அதுக்குத்தான் அங்கே வர்ரேன்......."

 " சார்! அவசரப்படாதீங்க! கொஞ்சம் இருங்க, இப்பக்கூட பங்களாவை விற்றுத் தரேன்னு ஒரு புரோக்கர் வந்திருக்காரு, உங்க போன் நம்பரை கேட்கறாரு, தரலாமா?"

 " அவரோட நானே பேசறேன், போனை அவரிடம் கொடு!"

 " குட் ஈவினிங் சார்! புரோக்கர் சதானந்தம் பேசறேன், இருபது வருஷமா தொழில் செய்றேன், உங்க பங்களாவுக்கு நல்ல பார்ட்டியா கிடைச்சிருக்கு, அதை சொல்லத்தான் உங்க போன் நம்பரை ஏஜெண்டிடம் கேட்டேன்...."

 " அப்படியா! என்ன விலை தரேன்னு சொல்றாங்க?"

 " உங்களுக்கு முழு விவரம் தெரியுமோ, தெரியாதோ, நான் கேள்விப்பட்டதை சொல்றேன், யாரோ உங்க பங்களாவிலே பேய் நடமாட்டம் இருக்கு, சதங்கையொலி கேட்குது, அழுகிற சத்தம் கேட்குதுன்னு பயமுறுத்தி வாங்கறவங்களை விரட்டிடறாங்க, இப்பத்தான் ஒரு நல்ல பார்ட்டியை கஷ்டப்பட்டு சம்மதிக்க வைச்சிருக்கேன்......"

 " அதெல்லாம் சரி, என்ன விலை தரேன்னு சொல்றாரு?"

 " பத்து பதினைந்து பேர் வந்து பார்த்தாங்க, எல்லாருக்கும் இடம் பங்களா எல்லாம் பிடிச்சிருக்கு, ஆனா உங்க பொண்ணு இந்த வீட்டிலே தற்கொலை செய்துகிட்டு இப்ப பேயா உலாவுகிறதா கேள்விப்பட்டதும், நழுவிடறாங்க, உங்க பொண்ணு இந்த பங்களாவிலே தற்கொலை பண்ணிக்கிட்டதும், உடனடியா நீங்களும் உங்க சம்சாரமும் வெளிநாடு போய்ட்டதையும் என்னாலே மறுக்க முடியலே, அதனாலே அவங்க பேய் நடமாட்டம் உண்மைதான்னு நினைத்து ஓடிடறாங்க, அதனாலே உங்க பங்களா ரெண்டு கோடிக்கு மேலே மதிப்பு இருந்தாலும், ஒரு கோடிக்கு மேலே போகாது போலிருக்கு, இப்ப வந்திருக்கிறவரை விட்டீங்கன்னா, அப்புறம் இந்த விலைகூட கிடைக்கிறது கஷ்டங்க! ஒரு கோடிக்கு ஒத்துக்கிட்டீங்கன்னா, ஒரே வாரத்திலே டீலை முடிச்சிடலாம், கைமேல பணம் கிடைச்சுடும்,

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.