(Reading time: 18 - 35 minutes)

நான்தான் அந்தப் புரளியை பரப்பினது, உங்க ப்ளான் ரொம்ப கரெக்ட்! வாங்கறவருக்கும் நம்பிக்கை வர, நீங்க ரெண்டு பேரும் அங்கே படுத்து நிரூபிச்சிட்டா, வாங்கறவரும் நம்பி கோடிக்கணக்கிலே பணத்தை கொடுத்திடுவார், சார்! என்னை மறந்திடாதீங்க! எனக்கு பத்து லட்சம் தந்தால் போதும், மிச்சத்தை நீங்க எடுத்துக்குங்க! நான் வரேன்! நாளைக்கு திரும்ப மீட் பண்றேன்....."

 " ஒரு நிமிஷம்! பங்களா ஓனரோட பொண்ணு தற்கொலை பண்ணிக்கலே, அவளை பெற்றவங்களே கொன்னுட்டாங்கன்னு சொன்னதும், உன் கைச்சரக்கு தானே?"

 " ஆமாம் சார்! மன்னிச்சிடுங்க!"

 திட்டப்படி, சதானந்தமும் காசியும் அன்றிரவு பங்களாவில் இரவைக் கழித்தனர்.

 பேய் நடமாட்டம் என்பதெல்லாம் புரளிதான், உண்மையல்ல என தெரிந்தாலும், இருவர் மனதிலும் ஒரு திகில் இருக்கத்தான் செய்தது.

 உறங்க முடியவில்லை! எழுந்து உட்கார்ந்து தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

 பிறந்து வளர்ந்த கதை, கிராமத்தில் உள்ள வீட்டையும் நிலத்தையும் எப்படி யாரிடம் நல்ல விலைக்கு விற்று நிறைய பணம் திரட்டலாம் என்று விலாவாரியாக அலசிக்கொண்டிருக்கே,

அயர்ந்து தூங்கிவிட்டனர்!

 'க்ரீச்'! உரக்க ஒலித்த அந்த சத்தம் சதானந்தம், காசியை உலுக்கி எழுப்பியது!

உடல் வியர்த்துக் கொட்டியது! வயிறு கலங்கியது! என்ன நடக்குமோ என்ற திகில் இருவரையும் உறைய வைத்தது!

 'சலங்' 'சலங்'னு சலங்கை ஒலி! யாரோ நடந்துவருகிற சத்தம். இருவரும் நடுங்கியவாறு தலையிலிருந்து உள்ளங்கால் வரை, போர்வையால் போர்த்திக்கொண்டு, காதை மட்டும் தீட்டிக்கொண்டனர்.

 சில வினாடிகளில், ஒரு குரல் வந்தது. போர்வையை விலக்கிப் பார்த்தனர். ஒரே இருட்டு! எந்த உருவமும் கண்ணில் படவில்லை.

 மீண்டும் போர்த்திக்கொண்டனர்.

 " ஒரு நிமிஷம்! நான் சொல்றதை கேளுங்க! பயப்படாதீங்க!"

 இருவரும் போர்வையை விலக்கி, எழுந்து நின்றனர், பயத்துடன்!

 " உட்காருங்க!"

 அதிகாரமுடன் வந்த குரலுக்குப் பயந்து ஒடுங்கி அமர்ந்தனர்.

 " இப்படி யாராவது இங்கு வரமாட்டாங்களான்னு ரொம்ப நாளா காத்திருந்தேன். என் நம்பிக்கை வீண் போகலை, நீங்க வந்திருக்கீங்க! மனசு விட்டு உங்களிடம் பேசியபின்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.