(Reading time: 12 - 23 minutes)

 " டீச்சர்! இந்தக் காலனிக்கு வெளியே இருந்து வரேன். எங்க வீட்டிலே நானும் அம்மாவும் இருக்கோம்........"

 " அப்பா?"

 " அப்படி யாரும் எங்க வீட்டிலே இல்லே........"

 " அடப் பாவமே! கடவுள் ஏன் இப்படி ........?"

 " டீச்சர்! எங்க அம்மாவுக்கு அப்பா, அம்மா ரெண்டு பேருமே கிடையாது.....!"

 " என்னப்பா சொல்றே?"

 " எங்கம்மா சொன்னாங்க, அவங்க அனாதையாம்!

 பூரணி இடிந்து போய் நிலை குலைந்து நின்றாள்.

 " நான் வரேன், டீச்சர்!"

 அந்தப் பையன் எழுந்து வெளியேறினான்.

 

 வகுப்புக்கு வந்திருந்த குழந்தைகளிடம், அந்தச் சிறுவனைப் பற்றி பூரணி விசாரித்தாள்.

 மற்ற குழந்தைகளுக்கு தெரிந்ததெல்லாம், அவர்கள் படிக்கும் பள்ளியில் புதிதாக சேர்ந்திருக்கும் மாணவன், அவன்!

 "அவனுக்கு எப்படி இந்த வகுப்பு பற்றி தெரிந்தது?"

 " நான்தான் அவனுக்கு சொன்னேன், டீச்சர்!" என்றாள் ஒரு மாணவி.

 பூரணி அந்த மாணவியை பார்த்தாள்.

 " அவன், யாரோடும் பேசாமல் தனியாக நின்றான். எனக்கு என்னவோ அவனை பார்த்ததும், அவனுடன் பழகவேண்டும் போலிருந்தது. பேச்சுக் கொடுத்து, சிநேகமானோம்........"

 " அவன் வீடு தெரியுமா, உனக்கு?"

 " தெரியாது, நாளைக்கு அவனை கேட்டு உங்களிடம் வந்து சொல்கிறேன்......"

 மறுநாள் அவன் விலாசத்தை தெரிந்துகொள்ளும் வரையில் பூரணி நிம்மதியின்றி தவித்தாள்.

 இறைவா! ஏனிந்த கொடுமை? சிறுவனுக்கு அப்பா எனும் உறவே தெரியவில்லை என்று மனம் சங்கடப்பட்டபோது, அந்தச் சிறுவன் தன் தாயைவிட தான் மேலானவன் எனச் சொல்லி என் வாயை அடைத்துவிட்டானே!

 இது எப்படி நடந்தது? இறைவா! உன் விளையாட்டைப் பற்றி, பெரியவங்க சொல்லி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் இந்த விளையாட்டு ரொம்ப கொடுமையானது!

 இப்படி மனதிற்குள் புலம்பித் தவித்த பூரணி, மறுநாள் விலாசம் கிடைத்ததும், சும்மா

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.