(Reading time: 12 - 23 minutes)

இருப்பாளா?

 அந்த விலாசத்துக்கு ஓடினாள், உடனே, அந்த 'அனாதை' தாயைப் பார்த்துப் பேசுவதற்கு!

 வீடு வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது! எங்காவது அருகில் உள்ள கடைக்கு போயிருப்பாள், விரைவில் வந்துவிடுவாள் என வீட்டு வாசலிலேயே, பூரணி காத்திருந்தாள்.

 அப்போது அங்கு வந்த ஒரு பெண்மணி " யாருக்காக காத்திருக்கீங்கம்மா?" என பூரணியை கேட்டாள்.

 " இந்த வீட்டிலே இருக்கிற குமார் என்கிற பையனோட அம்மாவை பார்க்கணும்......."

 " அவ ராத்திரி ஏழு மணிக்கு மேலே தானே வருவா....குமார், பாவம்!, பள்ளிக்கூடத்திலிருந்து சீக்கிரம் வந்து, இங்க எங்கயாவது சுற்றித்திரிவான்....."

 " இல்லே, வீடு பூட்டியிருக்கலையே, பக்கத்திலேதான் எங்கேயாவது போயிருப்பாங்கன்னு நினைச்சேன்......"

 அந்தப் பெண்மணி சிரித்தாள்.

 " ஏம்மா சிரிக்கிறே?"

 " வீடு பூட்டற வழக்கமே இந்த வீடுகளிலே யாருக்குமே கிடையாது, அதெல்லாம் பணக்கார வீடுங்கள்லேதான், இங்க என்ன காசும், பணமும், நகையும், நட்டும் கொட்டியா கிடக்குது, திருட்டுப்போக! எந்த முட்டாளாவது, அந்த நினப்போட வந்தான்னா, அவன்தான் ஏதாவது வச்சிட்டுப் போகணும்....."

 அக்கம்பக்கத்தில் பூரணி விசாரித்தாள்.

 குமாரின் தாயின் பெயர் லீலா! அவளுடன் அந்த வீட்டில் வசிப்பது, அவளும் அவள் மகன் மட்டுமே! குடிவந்து, சில நாட்கள்தான் ஆகின்றன.

 காலையில் மகனை பள்ளிக்கு அனுப்பிவிட்டு வெளியே சென்றால், திரும்பிவர இரவு ஏழு மணிக்குமேல் ஆகிவிடுமாம்!

 எங்கு போகிறாள், என்ன வேலை செய்கிறாள் என்பது தெரியாதாம்.

 பூரணி அந்த வீடு அமைந்திருக்கும் இடத்தைப் பார்த்தாள்.

 ஒரே மாதிரியாக கட்டப்பட்ட வீடுகள் எதிரும் புதிருமாக முப்பது இருந்தன. ஹவுஸிங் போர்டு கடைநிலை மக்களுக்கு கட்டித்தந்த சிறிய வீடுகள்!

 பூரணிக்கு தெரியும், அந்தமாதிரி வீடுகளில் சமையலறையும் வராந்தாவும் மட்டுமே இருக்கும். குளிப்பதற்கும் இயற்கை உபாதைகளை கழிப்பதற்கும், முப்பது வீடுகளுக்கும் பொதுவாக கோடியில் இரண்டு குளியல் அறை வசதி! அதில் ஒன்று ஆண்களுக்கு, மற்றொன்று பெண்களுக்கு!

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.