(Reading time: 13 - 26 minutes)

 அப்போது வாடகைக்கு எடுத்த வீடு இருந்த பழைய கட்டிடம்தான், இன்று பெருமழையில் இடிந்து விழுந்துவிட்டது!

 இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருந்தபோது, கேசவனுக்கு துயரம் தாங்க முடியாமல் அழுதவாறே தரையில் விழுந்தான்.

 எப்படியெல்லாமோ சிறப்பாக வாழப் போகிறோம் என கனவு கண்டோமே, அந்த கனவு, கண் எதிரே இடிந்து நொறுங்கி விட்டதே என புலம்பினான்!

 " தம்பி! இந்தா, சூடாக இந்த டீயை குடி! வெறும் வயிறு, பசி தாங்கலே! எல்லாம் நல்லபடியா சரியாகிவிடும், எழுந்திருப்பா!"

 கேசவன் கண் திறந்து பார்த்தான். வெண்தாடியுடன் ஒரு முதியவர், கையில் டீக்கோப்பையுடன், அவன் அருகில் இருந்தார்!

 அவரைப் பார்த்ததும், கேசவனுக்கு கையெடுத்துக் கும்பிடத் தோன்றியது. ஏனெனில், இந்த தோற்றத்தில்தான், முருகப் பெருமான் வள்ளியின் எதிரில் காட்சி தந்ததாக நாடகங்களில் பார்த்திருக்கிறான்.

 அவர் காலில் விழுந்து எழுந்து அவர் கையிலிருந்த டீயை வாங்கிக் குடித்தான்.

 " தம்பி! இங்கே கூட்டத்திலே புழுக்கமாயிருக்கு! சற்று ஒதுங்கி வா!"

 இருவரும் கூட்டத்திலிருந்து விலகி நின்றனர்.

 " ஐயா! கடவுளா வந்து எனக்கு நல்ல வார்த்தை சொல்றீங்க! என்னை ஆசிர்வதிங்க, சாமி!"

 முதியவர் சிரித்தார்.

 " தம்பி! மனிதனின் முதல் எதிரியே அவன் மனம்தான்! இப்ப பார்! முன்பின் தெரியாத நான், உன் கண்களுக்கு கடவுளா தெரியவைக்கிறது, உன் மனசு! நான் கோவில் வாசல்லே பிச்சையெடுத்து வயிறு பிழைப்பவன்! இப்படித்தான் தப்புத் தப்பா உன் மனசு உன்னை ஆட்டிவைக்குது....."

 " ஐயா! கட்டிடம் இடிந்து விழுந்து அதிலிருந்த அத்தனை பேரும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறவங்களிலே, என் மனைவியும் மகனும் மருத்துவ மனையிலே இருக்காங்களே, அது பொய்யா? நீங்க என்ன சொல்றீங்கய்யா?"

 " கட்டிடம் இடிந்ததோ, அதிலிருந்த அத்தனை பேரும் உயிருக்குப் போராடிக்கிட்டிருக்கறதும், முழுக்க முழுக்க உண்மை!

 ஆனால், அத்தோடு நிற்காமல் உன் மனசு உன்னை அனாவசிய கற்பனைகளிலே தள்ளி இல்லாதவைகளை இருக்கிறதா நினைச்சு உன்னை வேதனைப்படுத்துதே, அது மனசு செய்கிற

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.