(Reading time: 5 - 9 minutes)

சிறுகதை - கையெழுத்து..! - பிரபு ராம்

வீட்டு பால்கனி  ஊஞ்சலில்... அப்பா அந்த வார அரசியில் நாளிதழை புரட்டி  கொண்டிருந்தார் .

நான் கீழே அமர்ந்து.... வெற்று காகிதத்தில் கிறுக்கிக்கொண்டிருந்தேன். மாலை தென்றல் நான் எழுதும் காகிதத்தை கலைத்துக் கொண்டிருந்தது.

'இந்தாங்க காபி☕️' - அப்பாவிடம் கோப்பையை தந்துவிட்டு அம்மா என் அருகில் அமர்ந்தாள் .

'என்ன செய்யற ? இத்தனை  பேப்பர் வேஸ்ட் பண்ணி?' - அம்மா

'என்னோட Signature ...' பெருமையாய் கிறுக்கியவை எல்லாம் காண்பித்தேன்.

'உங்க அப்பா கிட்ட கேட்க வேண்டியது தானே! சின்ன வயசுல உங்க தாத்தா கையெழுத்தையே  இவர் தான் சூப்பரா போடுவாராம்' - நமுட்டு சிரிப்பு உதிர்த்தாள் 😋.

புத்தகத்தை படித்தவாரே வயிறு குலுங்க சிரித்தார் அப்பா .

'அப்பா ஐடியா கொடுங்கப்பா '- கெஞ்சலாய் நான் !

'கையெழுத்துல நிறைய ஸ்டைல் இருக்கு.

முழு பேரும் எழுதுற sign !

Initials letters மட்டும் வெச்சு sign !

முதல் letter யும்...கடைசி letter மட்டும் தெரியற sign !

மேல் நோக்கிய sign !

கீழ் நோக்கிய sign ! இப்படி...!'

மீண்டும் தொடர்ந்தார்.

' எந்த ஸ்டைல் விட ரொம்ப முக்கியம்...எது உனக்கு சுலபமாவும் ...சௌகரியமாவும் வரும்னு பார்க்கணும். ஏன்னா! கையெழுத்து எப்பவும் ஒரே மாதிரி எல்லா நேரமும் இருக்கணும்.'

' கையெழுத்துனால...வாழ்க்கையை இழந்தவங்களும் உண்டு! மீட்டவங்களும் உண்டு !

நீ வேணும்னா  எங்க அம்மா கையெழுத்து  ட்ரை பண்ணேன்?!' - அப்பா முடித்தார்

' எது?! எழுதறதுக்கும்...கையெழுத்துக்கும் வித்தியாசமில்லாம இருக்குமே...அதுவா?! - நக்கலாய் சிரித்துகொண்டே அம்மா அப்பாவிடம் 'பல்பு...பல்பு..' என்றாள். இது மற்றவர்களை கிண்டல் செய்யும் எங்களுக்கான அடைமொழி.

அப்பா சிரித்தவரே மீண்டும் புத்தகத்தை புரட்டினார்.

அம்மா.... நான் அதுவரை முயற்சித்த கையெழுத்தை ஒவ்வொன்றாய் பார்த்தவள்...ஆலோசனைகளை பரிமாறினாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.