(Reading time: 5 - 9 minutes)

' ரமேஷ்....இந்த சுழிச்ச மாறி போட்ட R நல்லா இருக்கு.'

' எப்பவும் மேல் நோக்கி கையெழுத்து போடு....வாழ்க்கையும் மேல் நோக்கி இருக்கும்னு எங்க அப்பா சொல்லுவார்!'

அவள் சொல்ல சொல்ல ....நான் மாற்றிக்கொண்டே  வந்தேன்.

R சரியாய் வந்தால் ....h சரியாய் இல்லை!

முதல் முறை வருவது....அடுத்த முறை வரவில்லை!

அப்பப்பா....எல்லா முறையும் ....அதே போல் வருவதற்கு....நிறைய நேரம் எடுத்தது.

இருபது, இருபத்தைந்து முயற்சிக்குப்பின்... தோராயமாய் ஒரு வடிவத்திற்கு வந்தது என் கையெழுத்து!

‘Ramesh’ என்ற கையெழுத்தை பார்த்த அம்மா....

' கடைசில மூன்று  புள்ளி வெச்சு ...கீழே சின்னதா சிரிச்சா மாறி ஒரு கோடு போட்டா நல்லா இருக்கும்' - அம்மா

' ஆமாம்! அப்டியே ஹார்ட் போட்டு அம்பு குறியும் விட்டிட்டு ! Sign போட சொன்னா ....புள்ளி வெச்சு கோலம் போடறாங்க !' - இது அப்பாவின் கலாய்க்கும் நேரம் என்பதால் ...அவர் அம்மாவை பார்த்து 'பல்பு...பல்பு ...' என்று வாங்கியதை திருப்பித்தந்தார் .

நான் வாய்கொள்ளாமல் சிரிக்க...அம்மா பொய் கோவம் உதிர்த்துவிட்டு தொடர்ந்தாள்.

' கையெழுத்துங்கறது  காலத்துக்கும் நம்மோட வரும். வெறும் பேரு மட்டும் இருந்தா...ஏதோ  ஜீவனே இல்லாத மாதிரி  எனக்கு தோணும்.

'எல்லாத்தோட தொடக்கமா இருக்கற கையெழுத்துல ..புள்ளியும், சின்ன smiley யும் போட்டா ...அதுக்கு ஜீவன் வந்தா மாதிரி  தோணும்' என்றாள்.

அவள் கூறியது அழகாய் தோன்ற....கடைசியாய் மூன்று புள்ளியும்....smiley யும் போட்டேன்.

அம்மா சொன்னது சரிதான்!

என்ற கையெழுத்து என்னை பார்த்தது சிரித்தது !

அப்பாவிடம் காண்பித்தபின் ....'அம்மா நான் முதல் கையெழுத்தை எனக்கு பிடிச்ச maths நோட்ல போடறேன்' என்று விரைந்தேன்.

' இரு...இரு ! முதல் கையெழுத்த ஒரு புது பேப்பர் எடுத்து சாமிக்கு முன்னாடி sign பண்ணு. நாளைக்கு நான் கோவில் உண்டியல்ல போட்டுடறேன். ராகு காலம் முடிஞ்சதும் போடு '- அம்மா எப்போதும் பக்திமயம்தான்.

நான் சம்மதித்தேன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.