(Reading time: 18 - 36 minutes)

காட்டி, புகழைக் காட்டி, ஊரிலே இருக்கிறவங்களையெல்லாம்எங்க வீட்டுக்கு அனுப்பி, எங்க மனசை மயக்கி விளையாடறான், என்னப்பன் முருகன்!........"

 " செட்டியார்! இப்ப என்னை இங்கே அனுப்பி, உங்க மக வடிவழகிக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க ஆசைப்படறதும், இந்த சிக்கில் சிங்காரம் என்கிற பெயரிலே, அந்த முருகன்தான்னு நம்புங்க!"

 வையாபுரி சிரித்துக்கொண்டே, வானத்தைப் பார்த்து, 'என்னப்பனே, முருகா! நான் ரொம்ப சின்னவன்! உன் விளையாட்டை என்னால் தாங்கமுடியாது, கந்தா! இந்த இக்கட்டிலிருந்தும் என்னை நீதான் காப்பாற்றணும்!'.....சரி, ஐயா! இறுதியாகவும், உறுதியாகவும், சொல்றேன்! உங்க நடேச செட்டியாருடைய பெரிய மனசுக்கு நானும் வடிவழகியும் ரொம்ப கடமைப்பட்டவங்க! ஆனால், அதுக்காக, காலம் காலமா, எங்க பரம்பரையே நம்பி வாழற முறையிலிருந்து மாறுபட்டு, என்னாலேயோ, வடிவழகியினாலேயோ, உங்க விருப்பத்துக்கு இணங்க முடியாது! தயவுசெய்து, நீங்க கிளம்புங்க! எங்களை மன்னிக்கச் சொல்லுங்க, நடேசன் செட்டியாரை!"

 " உங்க முடிவுக்கு ஏன், உங்க மகளையும் கட்டாயப் படுத்தறீங்க! அவங்க இந்தக் காலத்துப் பொண்ணு! அவங்களுக்கு சில ஆசைகள் இருக்கலாம், இல்லையா?"

 " அந்த தப்புக் கணக்கு போடாதீங்க! என்னைவிட அவ இந்த விஷயத்திலே ரொம்ப கறார்!"

 " அதையும் நீங்களே சொன்னால் எப்படி? அவங்களை பேசவிடுங்க, செட்டியார்!"

 " 'முருகா! இந்த தடவை எப்படியாவது என்னை கவிழ்க்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா?' .....சரி, வடிவழகியிடம் நேரடியா பேசி தெரிஞ்சிக்கணுமா? வாங்க, வீட்டுக்கு போய் அவளிடம் கேட்கலாம்......"

 சிக்கில் சிங்காரத்துக்கு பெருமிதம் பிடிபடவில்லை, வந்த காரியம் வெற்றி! என மனதிற்குள் குதியாட்டம் போட்டார்.

 எப்படியாவது வடிவழகியை இங்கிருந்து நகர்த்திவிட்டால், பிறகு அவளை மடக்கிப் போடுவது சுலபம் என இறுமாந்தார்.

 வீட்டை அடைந்ததும், இருவரையும் பார்த்த வடிவழகியும் அவள் தாயும் எதிர்பாராத அதிர்ச்சியில் உறைந்தனர்.

 இதுவரையில், எல்லா முடிவுகளையும் தந்தைதான் எடுப்பார். அவை முற்றிலும் சரியாகவும் இருக்கும். இந்தமுறை ஏன் ஒரு அந்நியனை வீட்டுக்கே அழைத்து வந்து தங்களிடம் அவரை பேச வைக்கிறாரெனப் புரியாமல், சிக்கில் சிங்காரம், தான் வந்திருக்கும் நோக்கத்தை, நீண்ட நெடிய பிரசங்கத்தில் தெரிவித்து, மிகுந்த நம்பிக்கையுடன், வடிவழகியின் பதிலுக்காக காத்திருந்தார்!

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.