(Reading time: 18 - 36 minutes)

 ஊடகங்களில் வெளிவந்த பேட்டிகளில் அந்தப் பெண் அளித்த பதில்களிலிருந்தும், ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை.

 சில நாட்களில் இந்த விஷயம் மறக்கப்பட்டு மக்கள் அவரவர் கவலைகளில் மூழ்கினர், ஒரே ஒருவரைத் தவிர!

 அவர்தான் சிக்கல் சிங்காரம்!

 " அந்தப் பெண்ணிடம் ஏதோ தெய்வீக சக்தி இருக்கிறது. அவளை எப்படியாவது மடக்கிப் போட்டுவிட்டால், நானும் கோடீஸ்வரன் ஆகிவிடுவேன்." என திட்டமிட்டு, வடிவழகியின் (அதுதான் அந்தப் பெண்ணின் பெயர்) வீட்டை அடைந்தார்.

 தன்னை பெரிய செல்வந்தனாக காட்டிக் கொள்வதற்காக, காரில் வந்து இறங்கினார்.

 வடிவழகியும் அவள் தாயும் வீட்டு வாசலுக்கு வந்து, அவர் காரிலிருந்து இறங்குவதைப் பார்க்கும் வரையில், காத்திருந்தார்.

 " வாங்க! வாங்க!" என தன்னை உற்சாகமாக வரவேற்பார்கள் என நினைத்த சிக்கில் சிங்காரம், ஏமாந்து போனார்.

 அவர்கள் ஒரு சிறு புன்னகைகூட செய்யவில்லை. உள்ளே வரவேற்கவும் இல்லை. அவரை தெருவிலேயே நிற்க வைத்துப் பேசினர், இல்லை, சிங்காரம் பேசியதை காது கொடுத்து கேட்டனர்.

 " வணக்கங்க! என் பெயர் சிக்கில் சிங்காரம். நான் சென்னையிலிருந்து வந்திருக்கிறேன், தங்களுடன் கொஞ்சம் பேசவேண்டும், உள்ளே வரலாமா?"

 " எதுவாக இருந்தாலும், எங்கப்பா, வையாபுரி செட்டியார், கடைத் தெருவிலே தங்கப் பட்டரை வைச்சிருக்காரு, அங்கே போய், அவரிடம் பேசுங்க!"

 கதவை சாத்திக்கொண்டு உள்ளே போய்விட்டனர்.

 சிக்கில் சிங்காரத்துக்கு பேரதிர்ச்சி!

 ஓ! ரொம்ப உஷாராக இருக்கிறார்களே! இவங்களை மடக்கிப் போடறது, கஷ்டம் போலிருக்கே!

 என்று தலையை தொங்கப் போட்டுக்கொண்டே, தன்னை யாராவது பார்க்கிறார்களா என சுற்றுமுற்றும் பார்த்தார்.

 அக்கம்பக்கத்துக்கு வீட்டு வாசல்களில் நின்று வேடிக்கை பார்த்தவர்கள், சிரித்துக் கொண்டிருந்தனர்.

 தங்களை, சிங்காரம் பார்த்துவிட்டதும், வீட்டுக்குள் சென்றனர்.

 ஒருவர் மட்டும், சிங்காரத்தை நெருங்கி வந்து, சமாதானப் படுத்தினார்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.