(Reading time: 18 - 36 minutes)

முருகனை மறக்கமாட்டீங்க இல்லையா? நீங்க மறந்நாலும், அவன் உங்களை கைவிட மாட்டான்.

 இப்ப கேளுங்க! என்னை அந்த போட்டியிலே கலந்துக்க வைச்சதும், எனக்கு போட்டியிலே கேட்ட கேள்விகளுக்கு பதில்களை தந்ததும், முடிவிலே, ஒரு கோடி ரூபாய் பரிசை எனக்கு கிடைக்க வைத்ததும், அந்த பழனி முருகன்தான்!

 ஏன் அதை செய்தான், தெரியுமா? இந்தப் பணத்தின் மோகத்தை கொடுத்து நாங்க அவன்மீதுள்ள நம்பிக்கையிலிருந்து நழுவி இந்த உலகத்து பந்தங்களிலே சிக்கிக்கிறோமான்னு சோதிக்கிறான்.

 ஆனால், எங்க அப்பா, அம்மா என்னை வளர்த்த விதம், எனக்குள்ளே அவங்க உண்டாக்கியிருக்கிற முருகபக்தி தாக்கம், என்னை ஒருநாளும் கைவிடாது.

 நம்பினால் நம்புங்க! அந்த ஒரு கோடி ரூபாயைப் பற்றி, தமிழ்நாடே, ஏன், இந்தியாவே, நினைத்துக் கொண்டிருந்தபோது, நாங்க மூணுபேரும் அதைப்பற்றி கொஞ்சங்கூட மனசை அலட்டிக்கலை! ஏன்னா, அந்த ஒரு கோடிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! அந்தப் பணம் பழனி முருகனுக்கு தேவைப்படுகிற பணம், எங்க மூலமா அடைஞ்சிருக்கிற பணம் ஒரு கோடி ரூபாயை பழனி முருகன் பயன்படுத்தி, அவன் கோவில்லே, பக்தர்கள் பயன்படுத்துகிற தொங்குபாலத்தை சரிசெய்யப் போறான், நாங்க மூணுபேருமா இங்கிருந்து ஒரு கோடி ரூபாயை டி.டி.யா எடுத்துக்கொண்டு போய், பழனி உண்டியிலே போட்டுவிடுவோம், எங்களுக்கும் இந்த ஒரு கோடிக்கும் உள்ள தொடர்பு அத்துடன் முடிந்தது!

 இதெல்லாம் உங்களுக்கு மட்டுமில்லே, பொதுவா மக்களுக்கே புரியறதில்லே, என்னவோ ஏதோ எல்லாவற்றையும் தாங்களே தங்கள் முயற்சியினாலே சாதிக்கிறதா நினைச்சு ஏமாந்து கடைசியிலே பழனி முருகன் காலடியிலே விழறாங்க, நாங்க போன பிறவியிலே செய்த புண்ணியம், அந்தமாதிரி போராட்டத்துக்கு அவசியமில்லாமல், ஆரம்பத்திலேயே எங்களுக்கு தாய்ப்பாலுடன் ஊட்டிட்டான், நீங்ககூட, எங்கப்பா அடிக்கடி, 'என்னப்பன் முருகன்'னு சொல்றதை கேட்டு மனசுக்குள்ளே சிரிச்சிருப்பீங்களே, சரிதானே?......."

 சிக்கிலார், "ஆமாம்மா!" என்று தலை குனிந்தார்!

வையாபுரி தொடர்ந்தார்:

" ஐயா! என் அப்பன் முருகன் ஏன் இந்த நாடகத்தை நடத்தியிருப்பான்னு சொல்றேன், தினமும் தன்னைத் தேடி வருகிற பக்தர்கள், தொங்கும் பாலம் சரியாக இல்லாத காரணத்தால், படும் கஷ்டத்தை பார்க்க சகிக்க முடியாமல், பாலத்தை சரிசெய்ய தேவையான ஒரு கோடி ரூபாயை கோவில் நிர்வாகத்துக்கு எப்படியாவது கொடுக்கணும்னு தீர்மானித்தான், அவன்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.