(Reading time: 18 - 36 minutes)

 " நீங்க காரிலேதானே வந்திருக்கீங்க, சென்னைக்குத் தானே திரும்பி போறீங்க? நடேச செட்டியார் பெரிய மனிதர்! என்னைப் பார்க்க அவர் இங்கே வருவது, மரியாதையாக இருக்காது, இல்லையா அப்பா? அதனாலே, நாம ரெண்டு பேரும், இப்பவே ஐயாவுடன் காரிலே சென்னை போய், நடேச செட்டியாரை நேரிலே பார்த்து, நன்றி சொல்லிட்டு, நம்ம முடிவையும் சொல்லிட்டு வருவோம், கிளம்புங்க!"

 சிக்கிலுக்கு, வடிவழகியின் திடீர் முடிவை கேட்டு, ஜுரமே வந்துவிட்டது.

வசமாக மாட்டிக்கொண்டுவிட்டோமேஎன வியர்த்துக் கொட்டியது!

 அதை வையாபுரி செட்டியாரும் அவர் மனைவியும் கவனிக்கத் தவறவில்லை!

 வடிவைப் பார்த்து கண் சிமிட்டி புன்னகை செய்தனர்!

 தங்கள் மகளின் புத்திசாலித்தனத்தை வியந்தனர், இருவரும்!

 வந்திருப்பவர் ஒரு டுபாக்கூர் ஆசாமி என்று தெரிந்துவிட்டது!

 அவரை லேசில் விடக்கூடாதென முடிவெடுத்து, வையாபுரி செட்டியாரும் தன் மனைவியை பார்த்து, கண் சிமிட்டியவாறே, " ஒரு நாளைக்கு தேவையான உடைகளை எனக்கும் வடிவுக்கும் எடுத்து ஒரு பையிலே போட்டுக் கொடு, நாங்க கிளம்பறோம், போகிற வழியிலே சாப்பிட்டுக் கொள்கிறோம்......" என நாடகமாடினார்.

 இதற்குமேல், சமாளிக்க முடியாது என புரிந்துகொண்ட சிக்கில் சரண்டர் ஆனார்.

 " வடிவு! நீ ரொம்ப ரொம்ப புத்திசாலிம்மா! என்னை மன்னிச்சிடும்மா! நான் சொன்னதெல்லாம் பொய்தாம்மா! ஆனா, உன் அபரிமிதமான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி நானும் உன்னுடன் சேர்ந்து லாபம் அடையணுங்கிற நோக்கத்திலே, தப்பு பண்ணிட்டேம்மா"

 சிக்கில், கொஞ்சங்கூட வெட்கமில்லாம, வையாபுரி செட்டியாரின் காலில் விழுந்தார்.

 வடிவழகி உள்ளே போய் தண்ணீர் கொண்டுவந்து சிக்கிலிடம் தந்தார்.

 " ஐயா! உங்க மனசிலே ஒரு கேள்வி எழுந்திருக்குமே, எனக்கு எப்படி உங்க நாடகம் தெரியும்னு? சொல்றேன், எங்க குடும்பத்தை பரம்பரை பரம்பரையா காப்பாத்தற அந்த பழனி முருகன் எங்களை சமயத்திலே காப்பாற்றாமல் விடுவானா?

 எனக்கேது அந்த அளவு புத்திசாலித்தனம்?

 ஐயா! பழனி முருகன் நம்ம நாலு பேரை வைத்து ஒரு சின்ன நாடகம் நடத்தி தனக்குள்ளே மகிழ்ந்து போகிறான், இதை நானும் எங்கப்பா, அம்மாவும் நம்பறோம்!

 உங்களுக்கும் நல்லகாலம் பிறந்திடுச்சு, ஆமாம்! உங்களுக்கும் முருகனின் பெருமையை புரியவைக்கத்தான், உங்களை பகடைக்காயா வைச்சு நாடகமாடினான். இனி, நீங்க ஒருநாளும்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.