(Reading time: 5 - 10 minutes)

விரலை உடனே எடுத்துவிட்டேன்.

 உனக்கு மகிழ்ச்சி! என் முகச் சுருக்கத்தில் உனக்கு ஆனந்தம்!

 குழந்தைதானே, நான்!

கசந்ததை கணத்தில் மறந்து மீண்டும் விரலை வாயில் நுழைப்பேன், கசக்கும், உடனே வெளியில் எடுப்பேன்.

நீ கைதட்டி சிரிப்பாய்.  " படவா! இனிமே உன்னாலே அதை செய்ய முடியாது, விட்டுவிடு, சரியா? குட் பாய்!"  என்று என் கன்னத்தை எனக்கு வலிக்காமல் கிள்ளிவிட்டு, சிரிப்பாய்!

 அம்மா! அந்த சிரித்த முகத்தை இப்போ காட்டும்மா! ப்ளீஸ்மா!

 எனக்கு ஐந்து வயது ஆனதும், என்னை பள்ளிக்கு அனுப்புவாய். உன்னைப் பிரிந்து பள்ளி செல்ல, எனக்கு பிடிக்காத காரணத்தால், தரையில் புரண்டு அழுவேன்.

என்னை நீ குண்டுகட்டாக தூக்கிச்சென்று, ஸ்கூல்வேனில் ஏற்றிவிடுவாய்.

 வேனுக்குள் இருந்து, நான் 'அம்மா' என்று அலறும் குரல் உன் இதயத்தைப் பிழியும், எனக்குத் தெரியும்!  கண்களைத் துடைத்து வீட்டுக்குள் சென்று வேலைகளில் மூழ்குவாய்.

ஆனால், மனமோ என்னைச் சுற்றியே இருக்கும்.

 " இந்த சோகத்தை என்னால் தாங்க முடியாது, இறைவா!, அவனை உடனே பெரியவனாக்கிவிடு!" என்று நீ பிரார்த்தித்தனலோ, என்னவோ, சில நாட்களில் நான் விவரம் தெரிந்தவனாகி பள்ளி செல்வதை நேசிக்கத் துவங்கினேன். என் வயதுக் குழந்தைகளுடன் விளையாடி மகிழ!

 மாலை, வீடு திரும்பியதும், அக்கம்பக்கத்தில் வசிக்கும் குழந்தைகளுடன் விளையாட ஓடுவேன். நீ என்னை கொஞ்சிக் கெஞ்சி, வயிற்றில் ஏதாவது உணவை திணித்து விட்டு, 'சரி, போய் விளையாடு ஆனால், சீக்கிரம் திரும்பிவிடு' என்பாய்.

 ஏன் தெரியுமா? என்னைப் பார்க்காமல், என்னை கொஞ்சாமல், உன்னால், அதிகநேரம் இருக்கமுடியாது!

 எனக்கு மட்டும் என்ன?

இரவில், உன் அருகில் படுத்து உறங்கினால்தான் சுகமே!

 அந்தப் பருவம் முடிந்து, கல்லூரி மாணவனானேன்! அந்தக் கொடுமையை என்ன சொல்ல!

 உள்ளூரிலிருந்து வெளியூர், உன்னைப் பிரிந்து சென்றபோது, பச்சைக் குழந்தைபோல் இரவெல்லாம் அழுதேன்.

 " கண்ணா! நீ பெரிய படிப்பெல்லாம் படிச்சு, பெரிய மனுஷனாகி, உங்கப்பா மாதிரி, சம்பாதிக்க வேண்டாமா? காலேஜ் லீவு விடும்போதெல்லாம் ஓடிவந்துடு! கூடப் படிக்கிற மாணவர்களோட,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.