(Reading time: 11 - 22 minutes)

வீடுவீடா போய் ஓட்டு கேட்கிறதுக்குப் பதிலா, அங்கங்கே லோகல் லீடரா உள்ளவங்களை நம்ம பக்கம் இழுத்து, அவங்கமூலம் ஓட்டு சேகரிப்போம்!"

 " நல்ல ஐடியா! சரி, நீ ஒரு வேலை அர்ஜண்டா பண்ணு! நீ சொல்கிற லோகல் லீடர்கள் கூட்டத்தை நாளைக்கே கூட்டி, அவங்களிடம் பேசுவோம். என்ன, ஒரு பத்து, பதினைந்து பேர்தானே, நம்ம வீட்டு பந்தல்லியே கூடிப் பேசுவோம். ஏற்பாடு பண்ணு!"

 " தலைவா! அவங்க லீடர்கள் ஆனதினாலே, இந்தமாதிரி மசால்வடை, டீ கொடுக்க முடியாது, பந்தல்லே தரையிலே உட்காரச் சொல்ல முடியாது, ஒரு நட்சத்திர ஓட்டல்லே பார்ட்டி வைச்சு அங்கே வரவங்களுக்கு கொஞ்சம் தண்ணியை ஊத்தி குஷிப்படுத்தி நம்ம பக்கம் இழுப்போம், அரசியல் கட்சிங்க அவங்களை வளைச்சுப் போடறதுக்கு முன்பு, நாம முந்திக்கணும்...."

 " அப்படியே செய்! எவ்வளவு பணம் வேணும்?"

 " தலைவா! முக்கியமா, பார்ட்டிக்கு வர லீடர்களுக்கு அங்கேயே முன்பணமா கொஞ்சம் தந்து மடக்கிப் போடுவோம்......."

 " ஆமாமாம்! நாளை காலையிலே நான் பேங்க போய், கேஷா எடுத்துவச்சிக்கிறேன், ரெண்டு லட்சம் போதுமில்லே?"

 " என்ன தலைவா! நீங்க இன்னமும் அந்தக் காலத்திலேயே இருக்கீங்க! பத்து லட்சம் எடுத்து வைச்சுக்குங்க, நாம வீசற வலையிலே சிக்கினவங்களை எந்தக் காரணத்துக்காகவும் தப்பிக்கவிடக் கூடாதில்லையா? இப்பல்லாம், அரசியல் கட்சிங்க லட்சத்திலேயே பேசறதில்லே, கோடிக்கணக்கிலேதான் புரளுது, முன்னே சட்டசபை தேர்தலுக்கு செலவு செய்கிறதை, இப்ப கார்ப்பொரேஷன் தொகுதிக்கு செலவு செய்யறாங்க....."

 சிதம்பரம் தலையை சொறிந்தார்.

 " தலைவா! ஏன் சொல்றேன்னா, ஆற்றிலே இறங்கி காலை விட்டுட்டு, பாதியிலே வெளிவர முடியாதில்லையா? அப்படி வந்தா, செலவு செய்த பணம் அத்தனையும் நஷ்டமில்லையா? அதனாலே, நாம கொஞ்சம் யோசித்து இறங்கினாலும் பரவாயில்லே, இறங்கறதுன்னு முடிவு பண்ணிட்டா, முழுமூச்சா இறங்கிடணும்......."

 " பரமசிவம்! நீ சொல்றது, கரெக்ட்! நாளை காலையிலே வா, முடிவை சொல்றேன்!"

 பரமசிவம் வெளியே வந்து தொண்டர்களுடன் வெளியேறினான்.

 சிதம்பரம் பலத்த யோசனையுடன் தன் அறைக்குள் நுழையும்போது, அவருடைய கைபேசி சிணுங்கியது.

 " ஜோசியர் சுந்தரம் பேசறேன்....மறுபடியும் ஒருமுறை உங்க ஜாதகத்தை எடுத்துப் பார்த்தேன். உங்களைப்போல பரணி நட்சத்திரம், மேஷராசிக்காரங்களுக்கு இப்போ ரொம்ப யோகமான

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.